Mettur Dam Water : மேட்டூர் அணையின் நீர் மட்டம் என்ன தெரியுமா.? இத்தனை லட்சம் கன அடி நீர் வெளியேற்றமா.?
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணைக்கு வரும் ஒரு லட்சத்து 70ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Mettur Dam
மேட்டூர் அணையும்- விவசாயமும்
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பது மேட்டூர் அணையாகும், இந்த அணையில் திறக்கப்படும் நீரானது 12 மாவட்ட விவசாய மக்களின் விவசாயம் செழிப்பதற்கும், குடிநீர் தேவைக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்தால் விவசாயம் நல்ல செழிப்பாக வளரும். மேட்டூர் அணையில் தண்ணீர் வற்றினால் விவசாய நிலமும் வறட்சியை சந்திக்கும் எனவே காவிரி ஆறு விவசாயிகளுக்கு தெய்வமாக பார்க்கப்படுகிறது.
Mettur Dam
நிரம்பிய அணைகள்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக மேட்டூர் அணை நீர்மட்டம் கிழே சென்றிருந்தது. 35 முதல் 40அடி வரை மட்டுமே தண்ணீர் இருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1.75ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 12ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 75ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 17 வது நாளாக தடை விதித்ததுள்ளது.
ஒகேனக்கல்லில் வெள்ளபெருக்கு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 1லட்சத்து 40ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 1லட்சத்து 75ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,500 கன அடியாக உள்ளது.
பொங்கி வரும் காவிரி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.