இஞ்சிக்கு போட்டியாக அதிகரிக்கும் வெங்காயம் விலை.! தக்காளி விலை குறைந்ததா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம்?
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னை கோயம்பேட்டு மொத்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்தும் வருகிறது. இங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு வாங்கி சென்று விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறி விலை என்ன.?
காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து கோயம்பேட்டில் சந்தையில் விற்பனை விலையானது ஏற்றம், இறக்கம் காண்கிறது. அந்த வகையில் காய்கறிகளி விலையானது சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாயும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கேரட் விலை என்ன.?
சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Vegetables
கத்தரிக்காய் விலை.?
கத்தரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் பச்சை கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
தக்காளி, இஞ்சி விலை ?
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை ஆனது படிப்படியாக குறைந்து தற்போது ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதன் காரணமாக மக்கள் எண்ணிக்கையில் தக்கலை வாங்கிய விலைமாறிய தற்போது கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி செல்கின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் இஞ்சியின் நிலையானது தங்கத்துக்கு நிகராக உயர்ந்துள்ளது ஒரு கிலோ இஞ்சி நிலையானது கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.