இஞ்சி விலை மீண்டும் உயர்ந்ததா.? தக்காளி ஒரு கிலோ என்ன விலை..? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில்லரை விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் காய்கறி விலையானது கடந்த சில நாட்களாக எந்த வித உயர்வும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Vegetables
காய்கறி விலை என்ன.?
கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. அதற்கு ஏற்ப விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் இன்றுசென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலையை பொருத்தவரை பெரிய அளவில் மாற்றம் இல்லாம்ப் நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாயும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாயும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாயும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாயும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய், முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய், பச்சை கத்திரிக்காய் ஒரு கிலோ 30, பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உச்சத்தில் இஞ்சி விலை
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த இஞ்சியின் விலையானது தொடர்ந்து குறையாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சியானது தற்போது ஒரு கிலோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல தக்காளி விளையானது படிப்படியாக குறைந்து ஒரு கிலோ 15 ரூபாய்க்கு என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது