- Home
- Tamil Nadu News
- Tomato Price Today : தக்காளி விலை மீண்டும் கூடியதா.? குறைந்ததா.? கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை என்ன..?
Tomato Price Today : தக்காளி விலை மீண்டும் கூடியதா.? குறைந்ததா.? கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை என்ன..?
தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று விற்க்கப்பட்ட விலையான ஒரு கிலோ 90 ரூபாய் என்ற விலையில் மாற்றமில்லாமல் தக்காளியானது விற்பனையாகி வருகிறது.

உச்சத்தை தொட்ட தக்காளி விலை
தக்காளி விலை கடந்த ஒரு சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தக்காளி வாங்குவது முழுவதுமாக தவிர்த்து வருகின்றனர். ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் என்ற அளவிற்கு விற்பனைசெய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 50 ரூபாய் 100 ரூபாய் என உயர்ந்து இருநூறு ரூபாயை கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பாக தக்காளி எட்டியது. இதன் காரணமாக கிலோ கணக்கில் பொதுமக்கள் தக்காளியே வாங்கிய நிலை மாறி எண்ணிக்கையில் தக்காளியை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
குறைந்து வரும் தக்காளி விலை
தக்காளி விலை உயர்வு காரணமாக ஓட்டல் மற்றும் வீடுகளில் தக்காளி சாதம், தக்காளி தொக்கு, தக்காளி சட்னி போன்ற உணவு வகைகளை தயாரிப்பதை நிறுத்தினர். இந்த நிலையில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. 200 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, 180, 150 என குறைந்து நேற்றைய தினம் 90 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றும் தக்காளி விலையானது மாற்றமின்றி அதை 90 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து சற்று அதிகரித்துள்ளதன் காரணமாக தக்காளி விலையானது குறைந்து வருவதாகவும், வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
அதே நேரத்தில் தக்காளியானது சில்லரை விலையில் 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் தக்காளியை குப்பைகளை கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர் இதன் காரணமாக மாற்றுப் பயிருக்கு விவசாயிகள் சென்றதன் காரணமாக தக்காளி உற்பத்தியானது குறைந்தது. இதன் காரணமாகவே தக்காளியின் விலையானது அதிகரித்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது