- Home
- Tamil Nadu News
- ஆளுநர் ரவி கிடப்பில் போட்ட 10 மசோதாக்கள்.! உச்சநீதிமன்றம் ஒப்புதல்- என்னென்ன சட்ட மசோதா தெரியுமா.?
ஆளுநர் ரவி கிடப்பில் போட்ட 10 மசோதாக்கள்.! உச்சநீதிமன்றம் ஒப்புதல்- என்னென்ன சட்ட மசோதா தெரியுமா.?
தமிழக அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காததை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Governor Ravi case Supreme Court verdict : தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் ரவி எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் பல மாத காலம் கிடப்பில் போட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல கட்ட விவாதங்களுக்கு பிறகு உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. அதன் படி, சட்டப்பேரவையின் மசோதாக்களை நிராகரிக்க ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் ஏதும் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கண்டனம்
மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் தான் ஆளுநர் செயல்பட வேண்டும் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு நேர்மையானது இல்லையென கூறப்பட்டது. மேலும் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகு குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டப்படி தவறு,
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை பொறுத்தவரை ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. திருப்பி அனுப்பிய மசோதாவை சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் குடியரசுத் தலைவருக்கு ஆளுநரால் அனுப்ப முடியாது என கூறப்பட்டது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
திருப்பி அனுப்பிய மசோதாவை சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றிய உடன் மசோதாக்களை ஆளுநர் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். மசோதாவை திருப்பி அனுப்புவதோ அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதோ எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்திற்குள் முடிவெடுத்திருக்க வேண்டும்.
சட்டப்பேரவை அனுப்பி வைக்கும் மசோதாக்களின் மீது அரசியல் சாசனம் வழங்காத அதிகாரங்களை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பை வழங்கியது. மேலும் ஆளுநர் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தின் கீழ் ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
10 மசோதாக்கள் என்ன.?
இதன் படி ஆளுநர் ஒப்புதல் அளிக்காத அந்த 10 மசோதாக்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
1.தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த மசோதா,
2. சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா( சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மாற்றிடும் வகையில் மசோதோ)
3. தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா,
4. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா,
5. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா,
6. தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, (துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து முதல்வருக்கு மாற்றிட வழிவகை)
7.தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா
8. அண்ணா பல்கலைக்கழக திருத்த மசோதா (துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து முதல்வருக்கு மாற்றிட வழிவகை)
9.அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் திருத்த மசோதா,
10. தமிழ்நாடு தொழில்நுட்ப ல்கலைக்கழக திருத்த மசோதா.( தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகை)