MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொதுமக்களுக்கு குட்நியூஸ்! வீக் எண்ட் அதுவுமா போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

பொதுமக்களுக்கு குட்நியூஸ்! வீக் எண்ட் அதுவுமா போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Weekend Special Buses:வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : May 07 2025, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Weekend Special Buses: ஒவ்வொரு வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் சனி, ஞாயிறு அதாவது வார இறுதி நாட்கள் விடுமுறை மற்றும்  முகூர்த்தம் நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்து மேலாண் இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: மே 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை முகூர்த்தம், 10 மற்றும் 11 சனி, ஞாயிறுக் கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
கோயம்பேடு, கிளாம்பாக்கம் சிறப்பு பேருந்து

கோயம்பேடு, கிளாம்பாக்கம் சிறப்பு பேருந்து

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சிக்கு 9ம் தேதி வெள்ளிக்கிழமை 650 பேருந்துகளும், 10ம் தேதி சனிக்கிழமை 665 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 9ம் தேதி 100 பேருந்துகளும், 10ம் தேதி 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ஒரு வருடத்திற்கு அனைத்து அரசு பேருந்திலும் இலவசமாக பயணிக்கலாம்.! போக்குவரத்து துறை ஜாக்பாட் அறிவிப்பு
34
அனைத்து ஊர்களுக்கும் சிறப்பு பேருந்து

அனைத்து ஊர்களுக்கும் சிறப்பு பேருந்து

மாதாவரத்தில் இருந்து 9ம் தேதி 24 பேருந்துகளும், 10ம் தேதி 100 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 11ம் தேதி ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 950 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

44
முன்பதிவு செய்து பயணியுங்கள்

முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில் வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 11,841 பயணிகளும், சனிக்கிழமை 7,385 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 11,070 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு  www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு பேருந்து
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தோழர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு..! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு
Recommended image2
1.5 லட்சம் பேர் கலந்த திருமணம்.. 6 முறை ஆட்சி செய்த இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் மறுபக்கங்கள்
Recommended image3
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோட் செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
ஒரு வருடத்திற்கு அனைத்து அரசு பேருந்திலும் இலவசமாக பயணிக்கலாம்.! போக்குவரத்து துறை ஜாக்பாட் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved