MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜய் சொன்ன அதே 40 ரூபாய் கமிஷன்.. டெல்டாவில் குமுறும் முதிய விவசாயி..கொடூர வீடியோ.. ஸ்கோர் செய்யும் தவெக

விஜய் சொன்ன அதே 40 ரூபாய் கமிஷன்.. டெல்டாவில் குமுறும் முதிய விவசாயி..கொடூர வீடியோ.. ஸ்கோர் செய்யும் தவெக

தவெக தலைவர் விஜய், நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வசூலிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். தற்போது, டெல்டா பகுதி விவசாயி ஒருவர் கண்ணீருடன் பேசும் வீடியோ வைராலகி வருகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Oct 18 2025, 10:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டெல்டா விவசாயி வீடியோ வைரல்
Image Credit : Asianet News

டெல்டா விவசாயி வீடியோ வைரல்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் தளபதி விஜய் ஏற்கனவே 40 கிலோ நெல் மூட்டைக்கு 40 ரூபாய் வசூலித்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு தற்போது ஒரு முதிய விவசாயியின் வீடியோ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஏற்கனவே காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஒரு நெல் கொள்முதல் மையத்தில் பதிவான ஒரு வீடியோவில், 70 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க பேசுகிறார்.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
நெல் மூட்டைக்கு கமிஷன்
Image Credit : X

நெல் மூட்டைக்கு கமிஷன்

“நாங்கள் ராத்திரி பகலாக உழைச்சு நெல் விளைச்சிருக்கோம். ஆனா ஒவ்வொரு மூட்டைக்கும் 40 ரூபாய் கமிஷன் குடுக்கணும், இல்லேன்னா எடுப்பதில்லைன்னு சொல்றாங்க. இதை நாங்களே சொல்லி இருந்தா யாரும் நம்ப மாட்டாங்க. ஆனா விஜய் சொன்னது உண்மைதான்!” என்று அவர் கூறிய வீடியோ இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவியது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் தருகிறோம். நாங்கள் கேட்கிற இடத்தில் 4 காகித்தை கொட்டக்கூடாதா? விவசாயிகளிடம் பணம் வாங்கிட்டு கொட்ட வேண்டியதுதானே? லாரி வந்து நெல்லை எடுக்க முடியாதுன்னு சொல்றாங்க. கேட்டால் ரோடு சரியில்லை என்று சொல்றாங்க. இதையெல்லாம் அரசு தான் பேசணும். முதலமைச்சர் பேசுறாங்க, அரசு சொல்றாங்க. பணம் கொடுத்தா தான் எடுப்போம் அப்படினு சொல்றாங்க. டோக்கன் போடமாட்றாங்க. இதையெல்லாம் எப்போ செய்ற வேலை இது. வர அதிகாரிகள் இதை செய்ய வேண்டியது தானே” என்று ஆதங்கமாக கூறுகிறார்.

33
நெல் கொள்முதல் நிலையம்
Image Credit : Asianet News

நெல் கொள்முதல் நிலையம்

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கோபத்தையும், அரசின் செயல்பாடு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய், இந்தப் பிரச்சினையை முன்னரே எடுத்துரைத்திருந்தார். அவரது குற்றச்சாட்டு தற்போது உண்மையாகியுள்ளது. இது தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்தி, விவசாயிகளுக்கு நியாயம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் உழைப்பை சுரண்டும் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க அரசு எவ்வாறு செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
திமுக
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jason Sanjay Opens Up: அப்பா காத்திருக்கிறார்! தந்தையைப் பற்றி முதன்முதலாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்.!
Recommended image2
Now Playing
சமூக நீதி நாள்: தந்தை பெரியார் உருவப்படத்திற்கு தவெக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை!
Recommended image3
Now Playing
லண்டன் பயணத்தை நிறைவு செய்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் !
Related Stories
Recommended image1
விஜய் மட்டும் தான் என்னை விசாரிக்கலை..! ரொம்பவே ஆதங்கப்பட்ட டாக்டர் ராமதாஸ்..! தவெகவுக்கு ஒரே மவுசுதான்
Recommended image2
19 நாட்களுக்குப் பிறகு பனையூர் வந்த விஜய்! ஜாமீனில் வந்த நிர்வாகிகளுடன் சந்திப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved