- Home
- Tamil Nadu News
- திருப்பதி போற பிளான் இருக்கா! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
திருப்பதி போற பிளான் இருக்கா! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் ஜூன் 3 வரை காட்பாடி-திருப்பதி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரம் டூ திருப்பதி செல்லும் ரயில்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்துதான் அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். பெரும்பாலும் பேருந்து மற்றும் ரயில் பயணங்களின் மூலம் திருப்பதிக்கு சென்று வருகின்றனர். பராமரிப்பு பணிகள், சிக்னல் பணிகள், மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்கான ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதும் பகுதியாக ரத்து செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: காட்பாடியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரயிலும், மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 12.55 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரயிலும் இன்று முதல் வரும் ஜூன் 3-ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
அதேபோல் விழுப்புரத்தில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் வரும் ஜூன் 3-ம் தேதி வரையில் காட்பாடி-திருப்பதி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, திருப்பதியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் வரும் ஜூன் 3ம் தேதி வரையில் திருப்பதி-காட்பாடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
பயணிகள் கவனத்திற்கு
திருப்பதியில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் அதற்கு மாற்றாக திருப்பதியில் இருந்து இன்று முதல் வரும் ஜூன் 3-ம் தேதி வரையில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.