MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vijay Net Worth: விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா? வைரமும், தங்கமும், சொகுசு கார்களும்.. வேட்புமனுவில் தகவல்!

Vijay Net Worth: விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா? வைரமும், தங்கமும், சொகுசு கார்களும்.. வேட்புமனுவில் தகவல்!

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு அழைத்தும் செல்லாத விஜய், 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறார். நேற்று ஒரே மேடையில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்தார்.

2 Min read
Author : Rayar r
| Updated : Mar 30 2026, 06:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய் வேட்புமனு தாக்கல்
Image Credit : x

விஜய் வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நடிகரும், தவெக தலைவருமான விஜய், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

24
விஜய் சொத்து மதிப்பு என்ன?
Image Credit : Asianet News

விஜய் சொத்து மதிப்பு என்ன?

இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்யின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது விஜய்யுடன் இருக்கும் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி ஆகும். அசையா சொத்து மதிப்பு ரூ.115 கோடி ஆகும் என விஜய் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பூர்வீக சொத்தின் மதிப்பு 21.83 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தன்னிடம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 2 பிஎம்டபிள்யு, லெக்சஸ், டோயட்டோ வெல்பயர் உள்ளிட்ட கார்கள் சொந்தமாக இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Related image1
ஜெயலலிதா முதல் விஜய் வரை.! ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் யார்?
Related image2
கார் ஓட்டுநர் மகனுக்கு சீட் கொடுத்த விஜய்.. 30 ஆண்டு விசுவாசத்துக்கு பரிசு.. யார் இந்த ராஜேந்திரன்?
34
விஜய் மனையிடம் உள்ள நகைகள்
Image Credit : google

விஜய் மனையிடம் உள்ள நகைகள்

விஜய் மனைவி சங்கீதாவிடம் ரூ.4.07 கோடியில் 3,132 கிராம் தங்கம்; ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் அசையா சொத்து மதிப்பின் நடப்பு சந்தை ரூ.220 கோடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் அசையா சொத்துகளை பொறுத்தவரை நீலாங்கரையில் உள்ள பங்களா, பனையூர் இல்லம், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் என உள்ளன.

சொகுசு கார்கள்

அசையும் சொத்துகளை பொறுத்தவரை வங்கி வைப்புத் தொகை, பங்குகள் மற்றும் நிறுவன முதலீடுகள் உள்ளன. கடந்த நிதி ஆண்டில் சுமார் ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட கடன்கள் அல்லது வங்கிக் கடன்கள் ஏதும் இல்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன. விஜய்யிடம் Rolls Royce Ghost, BMW, Audi போன்ற சொகுசு கார்களும் நிறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#TVK president actor #Vijay files nomination to contest from #Perambur.

His income:
2024-25 - Rs 184.53 crores
2023-24 - Rs 105.69 crores
2022-23 - Rs 198.75 crores
2021-22 - Rs 237.46 crores 
2020-21 - Rs 8 crores

1/7@xpresstn@NewIndianXpress@TVKVijayHQpic.twitter.com/dxrwexsmaQ

— S Mannar Mannan (@mannar_mannan) March 30, 2026

44
தனித்து போட்டியிடும் விஜய்
Image Credit : Asianet News

தனித்து போட்டியிடும் விஜய்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு அழைத்தும் செல்லாத விஜய், 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறார். நேற்று ஒரே மேடையில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்தார். நான் ஏற்கெனவே கூறியபடி விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் தி.நகர் தொகுதியிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும், செங்கோட்டையன் கோபிச்ச்செட்டிபாளையம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

டிரைவர் மகனுக்கு சீட்

பாமக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் விஜய் தனது நீண்டகால ஓட்டுநர் மற்றும் உதவியாளரான ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது பேசுபொருளானது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அரசியல் சுவாரஸ்யம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அதிமுக என்ற கட்சி இந்த தேர்தலுக்கு பிறகு இருக்காது ! TVK நிர்மல் குமார் பேட்டி
Recommended image2
Now Playing
ஜெயலலிதா முதல் விஜய் வரை.! ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் யார்?
Recommended image3
அமெரிக்காவின் கைப்பாவை பாகிஸ்தான் வேண்டாம்... இந்தியாவை முழுமையாக நம்பும் ஈரான்..!
Related Stories
Recommended image1
ஜெயலலிதா முதல் விஜய் வரை.! ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் யார்?
Recommended image2
கார் ஓட்டுநர் மகனுக்கு சீட் கொடுத்த விஜய்.. 30 ஆண்டு விசுவாசத்துக்கு பரிசு.. யார் இந்த ராஜேந்திரன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved