- Home
- Tamil Nadu News
- 24/7 வசூல் செய்து கொடுக்கிற ஏடிஎம் மெஷின் தான் செந்தில் பாலாஜி.... கரூரில் விஜய் நக்கல்
24/7 வசூல் செய்து கொடுக்கிற ஏடிஎம் மெஷின் தான் செந்தில் பாலாஜி.... கரூரில் விஜய் நக்கல்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூரில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாகத் தாக்கினார். செந்தில் பாலாஜியை திமுகவின் 'ஏடிஎம் மெஷின்' என்று சாடிய விஜய், 'பாட்டிலுக்கு பத்து ரூபாய்' எனப் பாடி விமர்சித்தார்.

கரூரில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கி பேசினார் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பொதுமக்கள் மற்றும் தவக தொண்டர்கள் என கூடியிருந்தோர் மத்தியில் உரையாற்றிய விஜய் ஆவேசமாக பேசினார். முதலில் செந்தில் பாலாஜி பற்றி நாசுக்காக பேசிவிட்டு வேண்டுமென்றே நிறுத்தி பின்னர் பேசுகிறேன் என ஒரு அழைப் முதலில் செந்தில் பாலாஜி பற்றி நாசுக்காக பேசிவிட்டு வேண்டுமென்றே நிறுத்தி பின்னர் பேசுகிறேன் என ஒரு hipe கொடுத்தார் .
பத்து ரூபாய் பாலாஜி என ஏற்கனவே அதிமுகவினர் கலாய்த்து வந்த நிலையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என விஜய் தொடர்ந்து பாட்டு பாடி செந்தில் பாலாஜியை கலாய்த்தார்
அதுமட்டுமின்றி திமுக முதல் குடும்பத்திற்கு 24 மணி நேரமும் கொள்ளையடிக்கும் பணத்தை வசூல் செய்து கொடுக்கும் ஏடிஎம் மெஷின் தான் மாஜி மந்திரி செந்தில் பாலாஜி என விஜய் கடுமையாக சாடினார்
கரூரில் விஜய் இன்று கலந்து கொள்வார் என அறிவித்த நாள் முதலே பரபரப்பு தொற்றிக் கொண்டது. காரணம் கரூர் செந்தில் பாலாஜி ஒவ்வொரு தெருவையும் ஒவ்வொரு வீட்டையும் தனது கையில் வைத்து கடந்த நான்கு வருடங்களாக தாங்கி வருகிறார். அந்த அளவிற்கு தொகுதி மக்கள் எந்த உதவி கேட்டாலும் தட்டிக் கழிக்காமல் உடனடியாக செய்து கொடுத்து அவரது மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் செந்தில் பாலாஜி
அதனால்தான் கரூர் செந்தில் பாலாஜியின் கோட்டை திமுகவின் கோட்டை அசைக்க முடியாத என்ற பெயர் பெற்றது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூரில் ஓரளவுக்கு கட்சி சார்பாக செல்வாக்கு பெற்று இருந்தாலும் செந்தில் பாலாஜியின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் நிலை குலைந்து போய் உள்ளார் என்பதை உண்மை.
இந்த நிலையில் கரூரில் செந்தில் பாலாஜியின் கோட்டைக்குள் புகுந்து உண்மையிலேயே சம்பவம் செய்திருக்கிறார் நடிகர் விஜய் என்று தான் சொல்ல வேண்டும்
காலை 11:45க்கு கரூரில் பேச வேண்டிய விஜய் மாலை 7.30 மணிக்கு தான் கரூரை வந்து அடைந்து அங்கு கூடியிருந்த தொண்டர்களிடம் பேசினார் .
அனைவரும் எதிர்பார்த்தது போலவே கரூரின் முக்கிய புள்ளியான மிகப் பிரபலமான திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக அட்டாக் செய்து விஜய் பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது