- Home
- Tamil Nadu News
- ஸ்டாலினுக்கு ஷாக்.! கூட்டணியில் இருந்து பல்டி அடிக்கப்போகும் முக்கிய கட்சி.? அதிர்ச்சியில் திமுக
ஸ்டாலினுக்கு ஷாக்.! கூட்டணியில் இருந்து பல்டி அடிக்கப்போகும் முக்கிய கட்சி.? அதிர்ச்சியில் திமுக
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ஈழத் தீர்மானம், சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றாததால் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். திமுகவும் தனது கூட்டணியை கடந்த 8 வருடமாக உடையாமல் பார்த்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் உள்ளது.
இதன் காரணமாக 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. எனவே 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியை தொடரும் வகையில் திமுக தலைமை காய் நகர்த்தி வருகிறது.
இந்த நிலையில் பலம் வாய்ந்த திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுகவும் திட்டமிட்டு வருகிறது. இதற்கு போட்டியாக கூட்டணியை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் முதலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக பாமக, தேமுதிக கட்சிகளை தங்கள் அணியில் இணைக்க திட்டமிட்டுள்ளது.
அதே நேரம் நடிகர் விஜய்யின் தவெகவையும் தங்கள் கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இது தொடர்பாக தவெக தரப்பில் இருந்து உறுதியான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திமுக தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், அக்கட்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கூட்டணி கட்சிகள் அவ்வப்போது மிரட்டி வருகிறது.
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக விரைவில் முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது. கடலூர், திண்டிவனம், தருமபுரி உள்ளிட்ட இடங்களில் இந்த கட்சி வலுவலாக உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் வேல்முருகன், நான் சட்டமன்றத்தில் பேசும் பேச்சுகளில் வெறும் 5 நிமிடம் மட்டுமே ஒளிபரப்பு செய்யுறாங்க,
இதற்கு கூட இந்த அரசு பயப்படுகிறது. நான் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் உட்பட யாரும் பதிலளிக்க முடியவில்லை.கடந்த 5 ஆண்டுகளில் நான் சட்டமன்றத்தில் பேசியதையும் சாதித்ததையும் மக்களிடம் எடுத்துச் சென்றாலே, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறும் எனவும் தெரிவித்தார்.
சிறிய கட்சியாக தொடங்கிய எங்கள் கட்சி இன்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் போட்டியிடும் இடங்களும் அதிகரிக்கும். தமிழக சட்டமன்றத்தில் தமிழீழ படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கட்சியின் தொண்டர்களுடைய உணர்வு, தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை தொடர்ந்து திமுக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை தான், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதனை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அம்மையார் தீர்மானமாக நிறைவேற்றி உள்ளார்கள். அப்போது கொண்டு வந்த தீர்மானத்தை அப்போது நகலெடுத்து இன்றைய தேதி வாசித்தாலே போதும். இதை ஏன் திமுக அரசு செய்ய மறுக்கிறது என்கிற வழி வேதனை உள்ளது.
சாதி வாரி கணக்கெடுப்பை பீகார் நடத்தி உள்ளது. தெலுங்கானா நடத்தியுள்ளது, கர்நாடகா நடத்திக் கொண்டு வருகிறது. மத்திய அரசுதான் இதை எடுக்க வேண்டுமென தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. திமுக அரசு தப்பித்துக் கொள்வது ஏற்புடையது அல்ல,
இதையெல்லாம் கொண்டு தான் கட்சி நிர்வாகிகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். தேர்தலில் எங்களுக்கு உரிய இடங்கள் கொடுக்க வேண்டும், சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களில் போட்டி போட வேண்டும் என நிர்வாகிகள் விரும்புகிறார்கள். இவை நிறைவேற்றப்படாவிட்டால் கூட்டணியில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.