MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை எப்போது? ரயில்வே சொன்ன குட்நியூஸ்..! மக்கள் ஹேப்பி!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை எப்போது? ரயில்வே சொன்ன குட்நியூஸ்..! மக்கள் ஹேப்பி!

Velachery–Parangimalai Rail Service Launch Update: வேளச்சேரி - பரங்கிமலை இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் ரயில் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்குவது எப்போது என்ற அப்டேட்டை தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

1 Min read
Author : Rayar r
Published : Nov 17 2025, 07:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சென்னைக்கு கைகொடுக்கும் புறநகர் ரயில்கள்
Image Credit : our own

சென்னைக்கு கைகொடுக்கும் புறநகர் ரயில்கள்

சென்னையில் கடற்கரை‍‍-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோ,

கடற்கரை‍-வேளச்சேரி இடையே பறக்கும் மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றன. சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் கைகொடுத்து வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை
Image Credit : Indian Railway

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை

சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை இருந்தாலும் புறநகர் ரயில்கள் மிகவும் குறைவான கட்டணத்தில் சேவையை வழங்கி வருவதால் புறநகர் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள் இந்த ரயில்களை மலைபோல் நம்பியுள்ளனர். இதற்கிடையே வேளச்சேரி-பரங்கிமலை இடையே 5 கிமீ தொலைவுக்கு ரூ.495 கோடி செலவில் பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி நடந்து வந்தது.

பல ஆண்டுகள் பணிகள் பாதிப்பு

இந்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், 4.5 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாக ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் இந்த பணிகளுக்காக

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் நீதிமன்றம் சென்றதால் பல ஆண்டுகளாக தண்டவாளம் அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. பின்பு நீதிமன்றத்தின் மூலம் இப்பிரச்சனை தீர்க்கப்பட்டு எஞ்சியிருக்கும் இடங்களில் பணிகள் நடைபெற்று வந்தன.

Related Articles

Related image1
ரயிலில் குழந்தைகளுக்கு 'இந்த' வயது வரை பாதிக் கட்டணம்..! இந்த சலுகை உங்களுக்கு தெரியுமா?
Related image2
அட்ரா சக்க.. வெறும் ரூ.1க்கு ரயில், மெட்ரோ, பேருந்து டிக்கெட்.. சென்னை ஒன் செயலில் அதிரடி ஆஃபர்
33
ரயில்கள் இயக்கப்படுவது எப்போது?
Image Credit : Indian Railway

ரயில்கள் இயக்கப்படுவது எப்போது?

அந்த பணிகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, சில நாட்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் சரக்கு ரயிலை ஓட்டிப் பார்த்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அடுத்த மாதம் பயணிகள் ரயிலை கொண்டு இந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

அதன்பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி கிடைத்தவுடன் வரும் ஜனவரி மாதம் முதல் வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் இருந்து வந்த வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கபட உள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் பயணிகள் விரைவாக செல்ல முடிவது மட்டுமின்றி இந்த வழித்தடத்தில் சாலை போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தென்னக இரயில்வே
சென்னை
தொடர்வண்டிப் போக்குவரத்து
ரயில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image3
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Related Stories
Recommended image1
ரயிலில் குழந்தைகளுக்கு 'இந்த' வயது வரை பாதிக் கட்டணம்..! இந்த சலுகை உங்களுக்கு தெரியுமா?
Recommended image2
அட்ரா சக்க.. வெறும் ரூ.1க்கு ரயில், மெட்ரோ, பேருந்து டிக்கெட்.. சென்னை ஒன் செயலில் அதிரடி ஆஃபர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved