அண்ணாமலையாரின் அருளை பெற திருவண்ணாமலை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா! எப்போது தெரியுமா?
Amit Shah to Visit Tiruvannamalai Temple: அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் தமிழகம் வருகிறார்.
Amit Shah
அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.
Amit shah to visit Tamilnadu
அதாவது அமித்ஷா வருகிற 27ம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார். 28ம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு செல்லும் அமித்ஷா, அங்கு திருவண்ணாமலை மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் கோவை உள்ளிட்ட மாவட்ட அலுவலகங்களையும் ரிமோட் மூலம் திறந்து வைக்க உள்ளார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tiruvannamalai Temple
அதுமட்டுமின்றி உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனமும் செய்ய உள்ளார். பின்னர் அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்காக, காவல்துறை தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
Selvaperunthagai
இதனிடையே தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து டிசம்பர் 27ம் தேதி முற்றுகை மற்றும் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.