MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Udhayanidhi Net Worth: அட! ரூ.21 கோடியை தாண்டாத உதயநிதி சொத்து மதிப்பு.. முழு விவரம் உள்ளே!

Udhayanidhi Net Worth: அட! ரூ.21 கோடியை தாண்டாத உதயநிதி சொத்து மதிப்பு.. முழு விவரம் உள்ளே!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி இன்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரது சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Apr 02 2026, 09:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக தேர்தல் 2026
Image Credit : Asianet News

தமிழக தேர்தல் 2026

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். 

24
உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு
Image Credit : ANI

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு

அதன்படி, அவருக்கு ₹20.64 கோடிக்கு மேல் சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் உதயநிதி, தனது பெயரில் ₹12.92 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ₹7.72 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிருத்திகாவுக்கு எவ்வளவு சொத்து?

அவரது மனைவி கிருத்திகா பெயரில் ₹13.25 கோடிக்கு அசையும் சொத்துக்கள் உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, தேர்தல் பிரச்சாரத்தையும் உதயநிதி தொடங்கியுள்ளார். சென்னை அயோத்தியா நகர் பகுதியில், மக்களுடன் நேரடியாக உரையாடுவதற்காக ஆட்டோவில் பயணம் செய்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். முன்னதாக, வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாகவும் சென்றார்.

Related Articles

Related image1
கெத்து காட்டும் உதயநிதி.. சவால் விடும் விஜய்.. சீறும் எடப்பாடி.. தேர்தல் திருவிழா அப்டேட்ஸ்!
Related image2
எல்லை மீறும் உதயநிதி.. எகிறி அடித்த எடப்பாடி..! அதிமுக காரன் நினைத்தால்... அதிரடி எச்சரிக்கை!
34
2வது முறையாக ஒரே தொகுதியில் உதயநிதி
Image Credit : Asianet News

2வது முறையாக ஒரே தொகுதியில் உதயநிதி

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "இந்த முறை நாங்கள் சரித்திரம் படைப்போம், நிச்சயம் வெற்றி பெறுவோம். எங்கள் தலைவர் (மு.க. ஸ்டாலின்) இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பார்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின், இதே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது. 2021 சட்டமன்றத் தேர்தலில், பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ. கசாலியை 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார். இந்த முறை, அதிமுக சார்பில் ஆதிராஜாராம் அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

திமுக தேர்தல் வாக்குறுதி

சமீபத்தில், மக்கள் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க உதவும் வகையில் ₹8,000 மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படும் என உதயநிதி அறிவித்திருந்தார். மேலும், மாநில அரசின் திட்டத்தின் கீழ் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மாதம் ₹2,000 ஆக உயர்த்துவது, பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை தொடர்வது, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்துவது, தகுதியான குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ₹10 லட்சமாக உயர்த்துவது போன்ற பல திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

44
ஸ்டாலின் சொத்து மதிப்பு
Image Credit : Asianet News

ஸ்டாலின் சொத்து மதிப்பு

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் வெளியாகி இருந்தன. கடந்த நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கலின் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலினின் அசையும் சொத்துக்கள் ரூ.3.30 கோடி ஆகும். அசையா சொத்துக்கள் ரூ.2.96 கோடி ஆகும். ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் அசையும் சொத்துக்கள் ரூ.1.32 கோடி ஆகும். அசையா சொத்துகள் ரூ.2.10 கோடி ஆகும். முதல்வர் ஸ்டாலினின் மொத்த வருமானம் 31 லட்சம் ரூபாய்.

சொந்தமாக வாகனம் இல்லை

அதே காலகட்டத்தில், அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் வருமானம் 5.33 லட்சம் ரூபாய் ஆகும். கையிருப்பு ரொக்கத்தைப் பொறுத்தவரை, முதல்வரிடம் 10,000 ரூபாயும், துர்கா ஸ்டாலினிடம் 40,000 ரூபாயும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பெயரில் எந்தவிதமான பைக், கார் உள்பட சொந்த வாகனங்களோ அல்லது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளோ இல்லை என்பது பிரமாணப் பத்திரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான 720 கிராம் பழைய தங்க நகைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அரசியல் சுவாரஸ்யம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
உதயநிதி ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
எம்.ஜி.ஆரின் பிரசாரம் - கலைஞரின் வியூகம்: காமராஜரையே அதிர வைத்த 1971 களம்..! 55 ஆண்டு ரெகார்ட்..
Recommended image2
கெத்து காட்டும் உதயநிதி.. சவால் விடும் விஜய்.. சீறும் எடப்பாடி.. தேர்தல் திருவிழா அப்டேட்ஸ்!
Recommended image3
Now Playing
ஆட்சியைக் காத்தவருக்கே அல்வா? - தனபாலைத் தவிக்கவிட்ட எடப்பாடி! தனபாலுக்கு இழைக்கப்பட்டதா துரோகம்.?!
Related Stories
Recommended image1
கெத்து காட்டும் உதயநிதி.. சவால் விடும் விஜய்.. சீறும் எடப்பாடி.. தேர்தல் திருவிழா அப்டேட்ஸ்!
Recommended image2
எல்லை மீறும் உதயநிதி.. எகிறி அடித்த எடப்பாடி..! அதிமுக காரன் நினைத்தால்... அதிரடி எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved