MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Politics 2026: திமுக ஆதரவில் தவெக ஆட்சி? இது உ.பி.க்களின் பெருமிதம் அல்ல! விஜய்யின் 'செக் மேட்' அரசியல்! செம வியூகம்!

TN Politics 2026: திமுக ஆதரவில் தவெக ஆட்சி? இது உ.பி.க்களின் பெருமிதம் அல்ல! விஜய்யின் 'செக் மேட்' அரசியல்! செம வியூகம்!

TN Politics 2026: தவெகவுக்கு ஆதரவு கொடுத்து திமுகவுடன் உறவை தொடர்வோம் என்று இடதுசாரிகள் கூறினாலும் எதிர்காலத்தில் சொன்னபடி நடக்குமா? என்பது கேள்விக்குறியே.

2 Min read
Author : Rayar r
Published : May 08 2026, 07:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026
Image Credit : X

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026ல் தவெக 108 இடங்கள் பெற்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுத்து விட்டனர். திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஏற்கெனவே தவெக பக்கம் சென்று விட்டது. மேலும் விசிகவும் விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் உள்ளது.

திமுக தயவால் விஜய் ஆட்சி?

''திமுகவை கடுமையாக பேசிய விஜய், இப்போது திமுக கூட்டணி கட்சிகளின் தயவால் ஆட்சி அமைக்க போகிறார்'' என உடன்பிறப்புகள் பெருமிதம் அடைகிறார்கள். ஆனால் இந்த இடத்தில் விஜய் ஜெயித்து விட்டார் என்பதே உண்மை. திமுகவிடம் இருந்த மதசார்பற்ற கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், இடதுசாரிகளை தன் பக்கம் கொண்டு வந்து விட்டார். விஜய் நினைத்தால் அதிமுகவின் இபிஎஸ்ஸிடம் எளிதாக பேசி ஆதரவு வாங்கி விட முடியும். ஆனால் அவர் கொள்கை எதிரி என கூறிய பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளையும் சீண்டவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மீண்டும் திமுக ஆள்கிறது
Image Credit : X/SriramMadras

மீண்டும் திமுக ஆள்கிறது

அதே வேளையில் அவர் திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு பெற்று இருப்பது பாஜக பக்கம் சாயாத மதசார்பற்ற ஆட்சியை தவெக வழங்கும் என மக்களிடம் எடுத்துரைத்துள்ளது. மேலும் திமுக கூட்டணியில் இருந்த மதசார்பற்ற கட்சிகளையும் விஜய் தங்கள் பக்கம் இழுத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். 'தவெக ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்' என இடதுசாரிகள் கட்சிகள் சொன்னாலும், ஸ்டாலின் சொல்லி தான் இவர்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தார்கள். திமுக தான் மீண்டும் ஆள்கிறது என ஒரு பேச்சுக்காக திமுக உடன்பிறப்புகள் பெருமிதம் அடைந்து கொள்ளலாம்.

Related Articles

Related image1
முதல்வர் பதவி எப்போது கிடைக்கும்? விஜய் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் சொன்ன அதிர்ச்சி தகவல்
Related image2
Numerology: விஜய்யின் 108: தளபதி முதல்வராவதை தடுத்த 'அந்த' எண்.. மிஸ்ஸானது எப்படி? அதிரவைக்கும் நியூமரலாஜி!
34
விஜய்யின் மாஸ்டர்பிளான்
Image Credit : AI

விஜய்யின் மாஸ்டர்பிளான்

ஆனால் உண்மையில் இந்த விஷயத்தில் விஜய் தான் வென்று இருக்கிறார் என்பதே உண்மை. ஏனெனில் ஒருவேளை திமுக தலைமை சொல்லி தவெகவிடம் முரண்பட்டு எதிர்காலத்தில் இடதுசாரிகள், விஜய்க்கான ஆதரவை வாபஸ் பெற்றாலும் அது விஜய்க்கு சாதகமாகத்தான் போய் முடியும். ஏன் என்றால் விஜய் ஆதரவு கேட்க அதிமுக, பாமக, அமமுக என பல்வேறு கட்சிகள் சாய்ஸில் உள்ளன. அவர் அங்கு ஆதரவு கேட்டு விடுவார். மேலும் மக்களுக்கான ஆட்சியை திமுக அரசியல் வன்மத்துடன் தனது கூட்டாளிகளை வைத்து கலைத்து விட்டதாக அவர் ஸ்டாலின் மீது பழிபோட்டு அனுதாபம் தேடிக் கொள்ளவும் முடியும். அது 2031 தேர்தலுக்கு தவெகவுக்கு பெரும் பலமாக அமையும்.

44
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த விஜய்
Image Credit : Asianet News

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த விஜய்

ஒருவேளை திமுக உத்தரவின் பேரில் அதன் கூட்டணி கட்சிகள் விஜய்க்கான ஆதரவை வாபஸ் பெற்று, அதிமுக, பாமக ஆதரவை தவெக பெற்றாலும் திமுக மீது இருக்கும் பழி காரணமாக மக்கள் இதை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். ஆக எப்படி பார்த்தாலும் விஜய் இந்த விஷயத்தில் மவுனமாக இருந்து சாதித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். திமுகவை பொறுத்தவை இடதுசாரிகள், விசிக தங்களை விட்டு போகாது என்றே நினைத்து இருக்கும்.

அவர்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து திமுகவுடன் உறவை தொடர்வோம் என்று கூறினாலும் எதிர்காலத்தில் சொன்னபடி நடக்குமா? என்பது கேள்விக்குறியே. எதிர்கால தேர்தலில் இந்த கட்சிகள் மீண்டும் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் என்றும் சொல்ல முடியாது. அந்த வகையில் காலம் காலமாக மதசார்பற்ற கூட்டணிகளை கையில் போட்டுக்கொண்டு பாஜக எதிர்ப்பை வைத்து அமோக வெற்றிகளை பெற்று வந்த திமுகவுக்கு இது பெருத்த அடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவு
டிவி.கே. விஜய்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
June School Holiday: கோடை விடுமுறை முடிந்த கையோடு! பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
Recommended image2
Now Playing
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Recommended image3
Leema Rose: என் மீது களங்கம் விளைவிக்கப் பார்த்தார்கள்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லீமா ரோஸ்!
Related Stories
Recommended image1
முதல்வர் பதவி எப்போது கிடைக்கும்? விஜய் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் சொன்ன அதிர்ச்சி தகவல்
Recommended image2
Numerology: விஜய்யின் 108: தளபதி முதல்வராவதை தடுத்த 'அந்த' எண்.. மிஸ்ஸானது எப்படி? அதிரவைக்கும் நியூமரலாஜி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved