MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Numerology: விஜய்யின் 108: தளபதி முதல்வராவதை தடுத்த 'அந்த' எண்.. மிஸ்ஸானது எப்படி? அதிரவைக்கும் நியூமரலாஜி!

Numerology: விஜய்யின் 108: தளபதி முதல்வராவதை தடுத்த 'அந்த' எண்.. மிஸ்ஸானது எப்படி? அதிரவைக்கும் நியூமரலாஜி!

Numerology: தவெக தலைவர் விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்றும், பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. விஜய் முதல்வராவதை தடுத்த அந்த எண், அந்த கிரகங்கள் என்ன என்பதை நியூமரலாஜி, ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : May 08 2026, 03:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆட்சி அமைக்க போராடும் தவெக தலைவர் விஜய்
Image Credit : AI

ஆட்சி அமைக்க போராடும் தவெக தலைவர் விஜய்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2026ல் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தவெக பெறாத நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்து 4 நாட்களுக்கு மேலாகியும் விஜய்யால் ஆட்சி அமைக்க முடியவில்லை. தவெக ஆட்சி அமைக்க காங்கிரசின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து விட்ட நிலையில், விஜய்க்கு விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

24
விஜய் முதல்வராவதை தடுத்த 'அந்த' எண்
Image Credit : Asianet News

விஜய் முதல்வராவதை தடுத்த 'அந்த' எண்

இது ஒருபக்கம் இருக்க, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தும் விஜய்யால் முதல்வர் நாற்காலியில் அமர முடியாததற்குப் பின்னால் ஒரு பலமான 'எண் கணித' (Numerology) பின்னணி இருப்பதாக நியூமரலாஜி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நியூமரலாஜி விதிகளின்படி விஜய் பெற்ற இடங்களின் மொத்த எண்ணிக்கை 108 (1+0+8 = 9). எண் 9 என்பது நவக்கிரகங்களில் 'தளபதி' என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு உரியதாகும்.

செவ்வாயின் ஆதிக்கம் தான் காரணம்

தனது முதல் தேர்தலிலேயே 108 இடங்களை விஜய் அள்ளியதற்கு இந்த செவ்வாயின் ஆதிக்கம் தான் காரணம். செவ்வாய் வீரம் மற்றும் அதிகாரத்தைக் குறிப்பதால், விஜய் ஒரு 'தளபதியாக' போர்க்களத்தில் வென்று காட்டியிருக்கிறார் என நியூமரலாஜி நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. இதன் கூட்டுத்தொகை 1 (1+1+8 = 10) இதில் எண் 1 என்பது சூரியனைக் குறிக்கும் 'அரச' எண்ணாகும்.

Related Articles

Related image1
Numerology: கோடீஸ்வர யோகம் தரும் 4 ரகசிய எழுத்துக்கள்: உங்கள் பெயர் இதில் தொடங்குகிறதா? முழு விவரம்
Related image2
Astrology: இந்த 4 ராசி பெண்கள் அதி புத்திசாலிகள்! காதலில் இவர்களை ஏமாற்றவே முடியாது! உங்க ராசி இருக்கா?
34
சூரியன் ஆதிக்கத்தால் நாற்காலியில் அமர முடியவில்லை
Image Credit : Asianet News

சூரியன் ஆதிக்கத்தால் நாற்காலியில் அமர முடியவில்லை

விஜய்க்கு 9-ஆம் எண் புகழைத் தந்ததே தவிர, அவர் 1-ஆம் எண்ணான அதிகார நிலையை அடைய இன்னும் ஒரு படி (10 இடங்கள்) குறைவாகவே உள்ளது. சூரியனின் ஆதிக்கம் முழுமையாகக் கிடைக்காததால், வாக்குகள் விழுந்தும் அவரால் 'சிம்மாசனத்தில்' அமர முடியவில்லை என்று நியூமரலாஜி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் விஜய்யின் பிறந்த தேதி 22 (2+2=4). எண் 4 என்பது ராகுவின் ஆதிக்கம் கொண்டது. ராகு அரசியல் களத்தில் ராகு திடீர் திருப்பங்களையும், எதிர்பாராத தடைகளையும் கொடுக்கக்கூடியவர் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

44
விஜய் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்
Image Credit : Gemini AI

விஜய் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்

இந்த 108 தொகுதிகள் விஜய்க்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. ஆனால், முழுமையான முதல்வர் என்ற அந்தஸ்துக்கு அவர் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்பதையே ராகுவின் ஆதிக்கம் உணர்த்துவதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஜோதிட சாஸ்திரங்கள், நியூமரலாஜி சாஸ்திரங்களின் கூற்றுகளை தாண்டி விஜய்க்கு தேவையான 118 என பெரும்பான்மை கிடைக்குமா? அவருக்கு விசிக, இடதுசாரி கட்சிகள் ஆதரவு கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் முழுக்க முழுக்க எண் கணித (Numerology) நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் தான் கூறப்பட்டுள்ளன. இது ஒரு செய்தி பகுப்பாய்வு நோக்கம் கொண்டதே தவிர, எவருடைய அரசியல் வெற்றியை அல்லது தனிப்பட்ட வாழ்வைத் தீர்மானிக்கும் நோக்கம் கொண்டதல்ல. அரசியல் களத்தில் ஒருவரின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது முழுக்க முழுக்க மக்கள் மட்டுமே.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Atrology: நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! ஜோதிட ரீதியாக பணத்தை ஈர்க்கும் டாப் 4 ராசிகள் இவைதான்!
Recommended image2
குபேர யோகம்: கடன் போகுது.. பணம் கொட்டுது.. இந்த ராசிகளுக்கு மே மாதம் ஜாக்பாட்
Recommended image3
Kedar Yog : 50 ஆண்டுக்குப் பின் சனி ஜெயந்தியில் கேதார யோகம்... 5 ராசிகளுக்கு செம ஜாக்பாட் வெயிட்டிங்..!
Related Stories
Recommended image1
Numerology: கோடீஸ்வர யோகம் தரும் 4 ரகசிய எழுத்துக்கள்: உங்கள் பெயர் இதில் தொடங்குகிறதா? முழு விவரம்
Recommended image2
Astrology: இந்த 4 ராசி பெண்கள் அதி புத்திசாலிகள்! காதலில் இவர்களை ஏமாற்றவே முடியாது! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved