MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • த.வெ.க. மதுரை மாநாடுக்கு பைக்கில் வரக்கூடாது! கெடுபிடி போடும் காவல்துறை!

த.வெ.க. மதுரை மாநாடுக்கு பைக்கில் வரக்கூடாது! கெடுபிடி போடும் காவல்துறை!

தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாட்டிற்கான போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதைகள் குறித்த விவரங்கள் இங்கே.

2 Min read
Author : SG Balan
Published : Aug 18 2025, 10:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
த.வெ.க. மதுரை மாநாடு
Image Credit : Asianet News

த.வெ.க. மதுரை மாநாடு

வருகிற ஆகஸ்ட் 21 அன்று மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) மாநில மாநாட்டையொட்டி, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மதுரை மாவட்ட காவல்துறை புதிய வழித்தடங்களை அறிவித்துள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்திற்கான வழித்தட மாற்றம் குறித்த முழு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மாநாட்டு வாகனங்களுக்கான வழித்தடங்கள்
Image Credit : TVK Vijay

மாநாட்டு வாகனங்களுக்கான வழித்தடங்கள்

பார்க்கிங் 1-க்கு வரும் வாகனங்கள்:

குமரி, நெல்லை, தென்காசி: கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

தூத்துக்குடி, விருதுநகர்: அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக வர வேண்டும்.

ராமநாதபுரம்: பார்த்திபனூர், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை: சிவகங்கை, திருப்புவனம், அ.முக்குளம், மீனாட்சிபுரம், ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

பார்க்கிங் 1ஏ-க்கு வரும் வாகனங்கள்:

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி: திண்டுக்கல், பாண்டியராஜபுரம், நாகமலைப்புதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாக வர வேண்டும்.

தேனி: ஆண்டிபட்டி கணவாய், உசிலம்பட்டி, செக்காணூரணி, நாகமலைப்புதுக்கோட்டை, கப்பலூர், கூடக்கோவில் வழியாக வர வேண்டும்.

பார்க்கிங் 2 மற்றும் 3-க்கு வரும் வாகனங்கள்:

சென்னை, விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை: திருச்சி, விராலிமலை, மேலூர், விரகனூர் சுற்றுச்சாலை, அருப்புக்கோட்டை சந்திப்பு, பாரபத்தி வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

34
கனரக வாகனங்களுக்கான மாற்று வழித்தடங்கள்
Image Credit : tvk

கனரக வாகனங்களுக்கான மாற்று வழித்தடங்கள்

சென்னை, வட மாவட்டங்களில் இருந்து:

விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி: திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.

சிவகங்கை, ராமநாதபுரம்: திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக செல்ல வேண்டும்.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரியில் இருந்து:

வட மாவட்டங்கள்: திருமங்கலம், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி வழியாக செல்ல வேண்டும்.

மேற்கு மாவட்டங்கள்: திருமங்கலம், திண்டுக்கல் வழியாக செல்ல வேண்டும்.

மேற்கு மாவட்டங்களில் இருந்து:

விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி: திண்டுக்கல், திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.

ராமநாதபுரம், சிவகங்கை: திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி வழியாக செல்ல வேண்டும்.

தேனி மாவட்டத்தில் இருந்து:

விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி: உசிலம்பட்டி, பேரையூர் வழியாக செல்ல வேண்டும்.

ராமநாதபுரம், சிவகங்கை: பெரியகுளம், திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.

44
பொதுமக்களுக்கான வாகன வழித்தடம்
Image Credit : Asianet News

பொதுமக்களுக்கான வாகன வழித்தடம்

பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக வரும் பொதுமக்கள், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள், விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் சென்று, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாகச் செல்ல வேண்டும். அல்லது கப்பலூர் மேம்பாலம், திருமங்கலம், கள்ளிக்குடி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாகவும் செல்லலாம்.

முக்கிய அறிவிப்பு:

மாநாட்டுக்கு வரும் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

மாநாடு நடைபெறும் அன்று, அருப்புக்கோட்டை சந்திப்பில் இருந்து பாரப்பத்தி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தாமல் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Related Stories
Recommended image1
Now Playing
தவெக தொண்டரை தாக்கினாரா சீமான் ? என்ன நடந்தது? l Seeman Angry Speech
Recommended image2
தவெக கொடி! முடியவே முடியாது!'தளபதி' விஜய்யை குஷியாக்கிய உயர்நீதிமன்றம்! தொண்டர்கள் கொண்டாட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved