- Home
- Tamil Nadu News
- திடீரென நடு ரோட்டில் காரில் இருந்து இறங்கிய விஜய்.! அதிர்ச்சியில் ஷாக் ஆகி நின்ற பொதுமக்கள்
திடீரென நடு ரோட்டில் காரில் இருந்து இறங்கிய விஜய்.! அதிர்ச்சியில் ஷாக் ஆகி நின்ற பொதுமக்கள்
நடிகர் விஜய் இன்று யாரும் எதிர்பாராத விதமாக பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவம் நிலைத்திட உறுதி ஏற்போம் என விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

TVK Leader Vijay Pays homage to Ambedkar statue! தமிழகத்தில் திமுக- அதிமுக என மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில், இதனை மாற்றிட திரைத்துறையில் இருந்து விலகி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். நடிகர் விஜய், தமிழக சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்ற குறிக்கோளோடு களப்பணியாற்றி வருகிறார். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என பெயர் சூட்டியவர், முதல் அரசியல் மாநாட்டையும் நடத்தி அசத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து திராவிட கட்சிகளுக்கு டப் கொடுத்து வருகிறார்.
tvk vijay
அரசியல் களத்தில் விஜய்
இந்த சூழ்நிலையில் மக்களிடத்தில் நேரடியாக அரசியல் செய்யவில்லையென்றும், Work From Home போல் Work From Politics ஈடுபட்டு வருவதாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்காமல் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
அடுத்தாக அரசியல் தலைவர்கள் நினைவு நாள், பிறந்த நாளுக்கு வெளி இடங்களில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவிக்காமல் தனது கட்சி அலுவலகத்தில் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வந்தார்.
அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை
இந்த நிலையில் இன்று அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகிறார்கள். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் இன்று காலை திடீரென பாலவாக்கத்தில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கு விஜய் தனி ஆளாக சென்று மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து நின்றனர். இதனிடையே அம்பேத்கர் பிறந்தநாள்தொடர்பாக தவெக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அம்பேத்கர் பிறந்தாளில் விஜய் உறுதி
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி,
தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.