MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பரந்தூர் செல்லும் விஜய்க்கு காவல்துறை போட்ட 4 கட்டளைகள்; என்னென்ன?

பரந்தூர் செல்லும் விஜய்க்கு காவல்துறை போட்ட 4 கட்டளைகள்; என்னென்ன?

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் மூலம் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை சந்திக்கிறார். 900 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் மக்களின் குறைகளைக் கேட்டு ஆதரவு அளிக்கவுள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jan 20 2025, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
tvk vijay

tvk vijay

அரசியல் களத்தில் விஜய்

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழ் திரைத்துறை மட்டுமில்லாமல் தென் மாநிலங்களில் விஜய்யின் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.

ஒரு படத்திற்கு 100 முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வரும் விஜய், அனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு அரசியலில் இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவர் கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். இதனையடுத்து விக்கிரவாண்டியில் மிகப்பெரிய அளவிலான மாநாட்டையும் நடத்தி அசத்தினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
vijay politics

vijay politics

தேர்தலை புறக்கணித்த தவெக

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்துள்ள விஜய், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை புறக்கணித்தார். மாநாட்டிற்கு பிறகு அரசியலில் தீவிரமாக இறங்குவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்காமல் தனது பனையூர் அலுவலகத்திற்கு மக்களை அழைத்து வந்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதே போல மூத்த தலைவர்கள், தியாகிகளின் நினைவு தினம் மற்றும் பிறந்த தினத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவிக்காமல் வீட்டில் இருந்தே புகைப்படத்திற்கு மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செய்து புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டது.

35
TVK Vijay

TVK Vijay

களத்திற்கு செல்லும் விஜய்

இதனால் விஜய்யை அரசியல் விமர்சகள் விமர்சித்த நிலையில் அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியை சந்தித்து புகார் மனுவை அளித்தார். இந்த நிலையில் அரசியலில் இறங்கிய பிறகு முதல் முறையாக மக்களை சந்திக்க களத்திற்கே விஜய் வரவுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு மாற்றாக காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து விளைநிலங்கள், நீர்நிலைகள் உட்பட 5,133 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

45
Parandur Airport

Parandur Airport

போலீஸ் கட்டுப்பாடு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பரந்தூர்,  ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்ளுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உண்ணாவிரத போராட்டம், சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தவெக தலைவர் விஜய் நேரடியாக களத்திற்கு செல்லவுள்ளார். அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு ஆதரவளிக்கவுள்ளார். எனவே பரந்தூருக்கு விஜய் வருவதால் பாதுகாப்பு தொடர்பாக போலீசாரிடம் தவெக சார்பாக மனு அளிக்கப்பட்டது.
 

55
TVK Vijay

TVK Vijay

மக்களை சந்திக்கும் விஜய்

ஏகனாபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் திடல் பகுதியில் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட காவல்துறை அனுமதி வழங்கப்படாததால்  தனியார் மண்டபத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி பரந்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விஜய்க்கு போலீசார் சார்பாக 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

1. அனுமதிக்கப்பட்ட வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பரந்தூர் பகுதிக்கு செல்ல வேண்டும். 

2. பரந்தூர், நாகப்பட்டு, நெல்வாய், ஏகனாபுரம், உள்ளிட்ட 9  கிராம மக்களை மட்டுமே சந்திக்க விஜய்க்கு அனுமதி 

3. பரந்தூர் மக்களை பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சந்திக்க அனுமதி 

4. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பரந்தூரில் விஜய் இருக்க கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
காவல்
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
School Holiday: மாணவர்களுக்கு இன்று ஜாலி நியூஸ்! கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Recommended image2
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Recommended image3
Now Playing
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved