MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • த.வெ.க. வசம் 15-20% வாக்குகள்! விஜயைச் சந்தித்து அறிக்கை அளித்த பிரசாந்த் கிஷோர்!

த.வெ.க. வசம் 15-20% வாக்குகள்! விஜயைச் சந்தித்து அறிக்கை அளித்த பிரசாந்த் கிஷோர்!

Vijay and Prashant Kishor: தமிழக வெற்றிக் கழகத்துக்கு 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் த.வெ.க. வாக்குகளை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகள் தேவை என்றும் ஆலோசனை நடத்தியுள்ளனர். விஜய் மார்ச் மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

1 Min read
Author : SG Balan
| Updated : Feb 11 2025, 08:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vijay and Prashant Kishor

Vijay and Prashant Kishor

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். இது தொடர்பான தனது அறிக்கையை தவெக பொதுச் செயலாளர் ஆனந்திடம் அவர் வழங்கி இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Vijay and Prashant Kishor

Vijay and Prashant Kishor

அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகம் அமைத்துக் கொடுப்பவராக பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர். அவர் திங்கட்கிழமை சென்னையில் தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்து ஆலோசனை நடந்ததியிருக்கிறார். நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நீடித்துள்ளது.

36
Vijay and Prashant Kishor

Vijay and Prashant Kishor

இந்நிலையில் இன்று பிரசாந்த் கிஷோர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்திடம் தனது ஆய்வறிக்கையை வழங்கியுள்ளார். அதில் தமிழ்நாட்டில் தவெகவுக்கு 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் த.வெ.க. வாக்குகளை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகள் தேவை என்றும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

46
Vijay and Prashant Kishor

Vijay and Prashant Kishor

தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் தவெகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பது குறித்தும் பிரசாந்த் கிஷோர் எடுத்துக் கூறினார் என்று சொல்லப்படுகிறது. இந்த அறிக்கையை விஜய் கைக்குச் சென்றதும் அறிக்கையின் அடிப்படையில் கட்சியின் தேர்தல் அணுகுமுறை குறித்து மீண்டும் ஆலோசனை நடக்கும் என்று கூறப்படுகிறது.

56
தவெக கட்சி தொடங்கி இரண்டாம் ஆண்டு

தவெக கட்சி தொடங்கி இரண்டாம் ஆண்டு

வரும் மார்ச் மாதத்தில் இருந்து விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்றும் தவெக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். பூத் வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்யும் பொறுப்பு மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

66
MK stalin and Vijay

MK stalin and Vijay

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. கட்சி தொடங்கிய பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தேர்தல் வியூகம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
விஜய் (நடிகர்)
தமிழ்நாடு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved