சென்னைவாசிகளே அலெர்ட்..! சென்னையில் அதிரடி போக்குவரத்து மாற்றம் - முழு விபரம்
சென்னையில் போக்குவரத்து அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களை இங்கு பார்க்கலாம்.

உலக கடல் வழிகாட்டுதலுக்கான உதவிகள் தினம் ஆண்டு தோறும் ஜூலை 1 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் சார்பில், பெசன்ட் நகர் - கலங்கரை விளக்கம் வரையிலான, 7 கி. மீ. , மாரத்தான் போட்டி, ஜூலை, 1ம் தேதி நடக்கிறது. அன்று, காலை 4: 00 மணி முதல் 7: 00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பெசன்ட் நகர் இரண்டாவது அவென்யு, மூன்றாவது அவென்யு, எம். எல். , பூங்கா நோக்கி வரும் வாகனங்கள், பெசன்ட் நகர் டிப்போ அருகே திருப்பி விடப்படும். ஏழாவது அவென்யு சந்திப்பு, எல். ஜி. , சாலை, எல். பி. , சாலை வழியாக செல்லலாம் அடையாறு சிக்னல் வழியாக வரும் பேருந்துகள், எம். எல். , பூங்கா அருகே திருப்பி விடப்படும் காந்தி சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
ஆர்.கே சாலையிலிருந்து செல்லும் வாகனங்கள், காந்தி சிலையை நோக்கி அனுமதிக்கப்படாது மந்தைவெளி சந்திப்பிலிருந்து தெற்கு கால்வாய் கரை சாலைக்கு, வாகனங்கள் அனுமதிக்கப்படாது. வி. கே. அய்யர் சாலை, ஆர். ஏ. புரம் 2வது பிரதான சாலை, சேர்மியர்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களே உஷார்.! இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு