Kutralam : குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க அனுமதியா.? சுற்றுலா பயணிகள் செல்லலாமா.? லேட்டஸ்ட் அப்டேட் என்ன.?
கோடை மழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து அருவிகளில் குளிக்க கடந்த ஒரு வார காலத்திற்கு மேல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தற்போது மழை குறைந்ததுள்ளதால் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
கோடை வெயிலும் குற்றாலமும்
கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்தது. இதன் காரணமாக குளுமையான இடங்களாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுக்க தொடங்கினர். இதனையடுத்து குற்றாலத்தில் உள்ள அருவிகளில் இயற்கையான தண்ணீர், சாரல் மழையில் மகிழ்ச்சி பொங்க ஆட்டம் போடலாம் என நினைத்து மக்களுக்கு வெறும் பாறை மட்டுமே காட்சி அளித்தது.
ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு..
குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு
இந்தநிலையில் தான் கடந்த 10நாட்களாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தென் மாவட்டங்களில் ஏரி, அணைகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. மேலும் குற்றாலத்தில் உள்ள அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.
இதனால் உற்சாகமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆட்டம் போட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சிறுவன் ஒருவனின் உயிரை பலி வாங்கியது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
Courtallam
அருவிகளில் குளிக்க அனுமதி
கடந்த 8 நாட்களாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மீண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
kutralam falls
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கடந்த 9 நாட்களுக்குப் பிறகு மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி ஐந்தருவி பழைய குற்றாலம் புலி அருவி சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தொடர் விடுமுறை என்பதால் குற்றாலம் நோக்கி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் கிடு,கிடுவென உயர்ந்த தக்காளி விலை.. உச்சத்தை தொட்ட பீன்ஸ், பூண்டு விலை எவ்வளவு தெரியுமா.?
manjolai
மாஞ்சோலை செல்ல தடை
இதனிடையே திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மணிமுத்தாறு அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஞ்சோலை குதிரை வெட்டி போன்ற சுற்றுலா தளத்துக்கு 9வது நாளாக தடை நீடித்து வருகிறது