MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இன்றைய TOP 10 செய்திகள்: சி.பி.ஆர் பதவியேற்பு முதல் போத்தீஸ் ரெய்டு வரை

இன்றைய TOP 10 செய்திகள்: சி.பி.ஆர் பதவியேற்பு முதல் போத்தீஸ் ரெய்டு வரை

இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றது முதல் மனித தொண்டையில் புதிய உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டது வரை பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.

2 Min read
SG Balan
Published : Sep 12 2025, 11:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு
Image Credit : Asianet News

சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

நாட்டின் 15வது குடியரசு துணைத்தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணப்பத்திரத்தை வாசிக்க அதனை ஏற்று வழிமொழிந்த சி.பி.ராதாகிருஷ்ணன், “சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் என்னும் நான்” என்று தான் பிறந்த கிராமத்தின் பெயரையும் உச்சரித்து பதவியேற்றுக்கொண்ட சம்பவம் தமிழக மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

210
முதல் முறையாக மணிப்பூர் செல்லும் மோடி!
Image Credit : X-@narendramodi

முதல் முறையாக மணிப்பூர் செல்லும் மோடி!

வன்முறைக்குப் பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி நாளை மணிப்பூருக்கு வருகை தரவுள்ளார். சுராசந்த்பூர் மற்றும் இம்பாலில் திட்டங்களைத் தொடங்கி வைத்து, மக்களைச் சந்திப்பார். எதிர்க்கட்சிகள் இதை 'தாமதமானது' என விமர்சிக்கின்றன. ரூ.7,300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். இம்பாலில் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து, ஒரு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார்.

Related Articles

Related image1
ஹமாஸை அழிச்சே தீருவோம்.. மூன்றே நாளில் 6 நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!
Related image2
மோடியின் கனவில் வந்த தாயார்... AI வீடியோவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ்!
310
போத்தீஸ் - வருமான வரித்துறை சோதனை
Image Credit : Asianet News

போத்தீஸ் - வருமான வரித்துறை சோதனை

Pothys: போத்தீஸ் ஜவுளிக் கடை உரிமையாளரின் இரு மகன்களின் சென்னை ஈசிஆர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

410
அரசு பேருந்தை ஆட்டைய போட்ட நபர்!
Image Credit : our own

அரசு பேருந்தை ஆட்டைய போட்ட நபர்!

சென்னை கோயம்பேட்டில் தமிழக அரசு பேருந்தை ஓடிசா இளைஞர் திருடிச்சென்றார். அந்த பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர் காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

510
விமானத்தில் தனியாக கழண்டு விழுந்த சக்கரம்!
Image Credit : Wikipedia

விமானத்தில் தனியாக கழண்டு விழுந்த சக்கரம்!

குஜராத்தின் மாநிலம் காண்ட்லாவில் இருந்து மும்பைக்கு 75 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் பாம்பார்டியர் Q400 விமானம் புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தின் சக்கரம் ஒன்று தனியாக கழண்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அந்த விமானம் மும்பைக்கு தனது பயணத்தை தொடர்ந்து பத்திரமாக தரையிறங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

610
அண்ணாமலையின் முதல் அசையா சொத்து
Image Credit : ANI

அண்ணாமலையின் முதல் அசையா சொத்து

சமூக வலைதளப்பதிவுகளில் அண்ணாமலை திமுக ஆதரவுடன் வாங்கிய சொத்துக்களின் விவரப் பட்டியல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை, "நான் மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக, இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான்’’ எனத் தெரிவித்துள்ளார்.

710
தொண்டையில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு!
Image Credit : Netherlands Cancer Institute

தொண்டையில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு!

நெதர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் மனித தொண்டையில் புதிய உறுப்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். புதிய புற்றுநோய் ஸ்கேனிங் பரிசோதனைகளை மேற்கொண்டபோது, தொண்டையின் மேல் பகுதியில் ஆழமாக இருக்கும் சில சுரப்பிகளை அவர்கள் தற்செயலாக கண்டறிந்தனர்.

810
நேபாளத்தில் இடைக்கால பிரதமர் நீதிபதி சுஷிலா கார்க்கி!
Image Credit : X/ Ujjwal Acharya

நேபாளத்தில் இடைக்கால பிரதமர் நீதிபதி சுஷிலா கார்க்கி!

ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்ததை அடுத்து, சுஷிலா கார்க்கி நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார். Gen Z குழுவான "வி நேபாளிக் குழு" நாடாளுமன்றத்தைக் கலைப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

910
உக்ரைனுக்கு சர்ப்பிரஸ் கொடுத்த பிரிட்டன் இளவசரசர்!
Image Credit : x/@Rimmesfk

உக்ரைனுக்கு சர்ப்பிரஸ் கொடுத்த பிரிட்டன் இளவசரசர்!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு, போரில் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். 'இன்விக்டஸ் கேம்ஸ் ஃபவுண்டேஷன்' குழுவுடன் அவர் கீவ் நகருக்கு வந்து, உக்ரைன் பிரதமர் மற்றும் வீரர்களை சந்தித்தார்.

1010
2 சீட்டுக்காக திமுக உடன் கூட்டணியா?
Image Credit : google

2 சீட்டுக்காக திமுக உடன் கூட்டணியா?

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், “வெறும் 2 சீட்டுக்காக திமுக.வுடன் கூட்டணி அமைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. நான் பெரியாரைப் படித்தவன் என்பதால் என்னை சாதி தலைவர் என்று சொல்கின்றனர். பெரியாரைப் படித்தவன் என்பதால் நான் திமுகவை ஆதரிக்கின்றேன். திமுக.விடம் அந்த ஓரிரு சீட்டுகளை கூட வாங்க முடியாத நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள்” என்றார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
தொல். திருமாவளவன்
வருமான வரி
துணை ஜனாதிபதி
வானூர்திப் பயணங்கள்
அண்ணாமலை பாஜக
நரேந்திர மோடி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved