Tomorrow Power Cut: சென்னையில் நாளை மின்தடை..எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
Tomorrow Power Cut: துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் சில பகுதிகளில் நாளை (செப்டம்பர் 19) சனிக்கிழமை மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை மின்தடை.
திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் சில பகுதிகளில் நாளை (செப்டம்பர் 19) சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, நாளை உங்கள் பகுதியில் மின்தடை இருக்கிறதா? என்பதை தெரிந்துகொண்டு வீட்டில் மொபைல், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை சார்ஜ் போட்டு வைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
மின்வாரியம் விளக்கம்
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சென்னை ஐடி காரிடார் பகுதியில் உள்ள 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
மின் விநியோக அமைப்பை உறுதி செய்யும் வகையில், மின் மாற்றிகள் (Transformers), பிரேக்கர்கள் மற்றும் துணை மின் நிலையத்தில் உள்ள பிற முக்கிய மின் உபகரணங்கள் உள்ளிட்டவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நேரத்தில் ஐடி காரிடார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஐடி காரிடார் பகுதயில்
- நாவலூர்
- தாழம்பூர்
- சிறுசேரி
- காரணை
- ஏகாட்டூர்
- OMR
- படுப்பாக்கம்
- SIPCOT சிறுசேரி
- எழில்முக நகர்
- ஜவஹர் நகர்
- காந்தி நகர்
- ஒலிம்பியா
- சந்தியா கார்டன் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

