குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் பொங்கல் திருநாளில் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. சென்னை, மதுரை போன்ற நகரங்களை விட, புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.
TASMAC
ஒரு காலத்தில் மதுக்கடைக்கு செல்பவர்கள் யாருக்கும் தெரியாமல் தலையில் முக்காடு போர்த்தி கொண்டு மறைந்து மறைந்து சென்று வந்தார்கள். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் மது பாட்டில்களுடன் செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நல்ல நிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் மது விருந்து இல்லாமல் விருப்பதில்லை. பெரிய நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை இந்த கலாச்சாரம் பரவி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் மது அருந்தி வருகின்றனர். மேலும் மது குடிப்பது தற்போது ஒரு பெஷனாகிவிட்டது.
TASMAC Shop
இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு எடுத்து நடத்தி வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தினமும் சராசரியாக 100 கோடிக்கும், வார இறுதி நாட்களின் ரூ.150 கோடி அளவுக்கும் விற்பனை நடைபெறுகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு வந்துவிட்டால் வருமானம் இரட்டிப்பாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய துறைகள் மட்டுமே வருமானத்தை கொட்டி கொடுக்கும் துறையாகும். இந்த வரமானத்தை வைத்து தான் அரசு இயந்திரமே இயங்குவதாகவே கூறப்படுகிறது.
Tamilnadu Government
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் விற்பனை அளவான ரூ.678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகமாகும். குறிப்பாக தலைநகர் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் தான் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். ஆனால், இந்த முறை யாரும் எதிர்பாராத விதமாக ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மது விற்பனையில் முன்னிலையில் உள்ளன.
TASMAC News
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு விடுமுறை கிடைத்தாலும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 9 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். காந்தி ஜெயந்தி, குடியரசு தின விழா, மிலாது நபி, திருவள்ளூவர் தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Republic Day
இந்நிலையில் 76வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதையோட்டி நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குடிமகன்கள் முன்கூட்டியே அதாவது நாளை விடுமுறை என்பதால் இன்றே வாங்கி வைக்க வரிசைக் கட்டி நிற்கின்றனர்.