ஒரு கிலோ தக்காளி வெறும் 4 ரூபாய்.! சந்தோஷத்தில் பை நிறைய அள்ளும் இல்லத்தரசிகள்
காய்கறி விலை குறைவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி. தக்காளியின் விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்.

சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள், அந்த வகையில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த பச்சை காய்கறிகளின் விலையானது சரசரவென குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதே போல எந்த சமையல் செய்தாலும் காய்கறிகளில் முக்கிய தேவையாக இருப்பது தக்காளி,
எனவே தக்காளி இல்லாமல் சமையல் செய்வது என்பதி சாத்தியம் இல்லாத ஒன்று, ரசம், சாம்பார், தக்காளி சாதம், பிரியாணி என அனைத்திற்கும் தக்காளி தேவையாகும். இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளிக்கு கடும் கிராக்கி இருந்தது.
உச்சத்தில் இருந்து சரிந்த தக்காளி விலை
ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் தக்காளியை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றவர்கள் பைகளில் ஒரு கிலோ என்ற அளவில் வாங்கினார்கள். இதன் காரணமாக தக்காளியை அதிகளவு விவசாயிகள் இந்தாண்டு பயிரிட்டதால் விளைச்சல் அதிகரித்து தக்காளி விலை அடி மட்டத்திற்கு சரிந்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் சாலையில் கொட்டும் நிலை உள்ளது.
தக்காளியை சாலையில் கொட்டும் விவசாயி
அய்யலூர் தக்காளி ஏல சந்தையில் நாட்டு ரக தக்காளி ஒரு கிலோ 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் செடியில் இருந்து தக்காளியை பறிக்காமல் அப்படியே விடும் நிலை நீடிக்கிறது. தக்காளியை விற்பனை செய்யும் விலையை விட செலவு செய்யும் விலை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தக்காளி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்
இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 ரூபாய்க்கு 4 கிலோ தக்காளியை பை நிறைய பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் பெரும் அளவில் சரிந்துள்ளது. இதன் படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பச்சை காய்கறி விலை என்ன.?
தக்காளி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இஞ்சி விலை என்ன.?
கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.