MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குவியல் குவியலாக தக்காளி.! அள்ளிச்செல்லும் பொதுமக்கள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?

குவியல் குவியலாக தக்காளி.! அள்ளிச்செல்லும் பொதுமக்கள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு மற்றும் சரிவு குறித்த தகவல். தக்காளி விலை சரிவு, ஆந்திராவில் விளைச்சல் அதிகரிப்பு, கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை பட்டியல்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 19 2025, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சமையலில் தக்காளி, வெங்காயம்
Image Credit : google

சமையலில் தக்காளி, வெங்காயம்

சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காய்கறிகள் தான். எனவே காய்கறி சந்தையில் தினந்தோறும் மக்கள் கூட்டம் கூட்டமாக பை நிறைய காய்களை வாங்கி செல்கிறார்கள். அதிலும் மற்ற காய்கறிகளை விட சமையலில் முக்கிய தேவையாக இருப்பது தக்காளி மற்றும் வெங்காயம். இந்த இரண்டு காய்கறிகளின் விலையானது உயர்ந்தால் அவ்வளவு தான். மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். 

24
ஏறி இறங்கிய தக்காளி விலை
Image Credit : Asianet News

ஏறி இறங்கிய தக்காளி விலை

கடந்த ஆண்டு இறுதியில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபாயை தொட்டது. இதே போல வெங்காயத்தின் விலையும் போட்டி போட்டு உயர்ந்தது. இதனால் இல்லத்தரசிகள் கடும் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், எப்போது விலை குறையும் என காத்திருந்தனர். அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது.

 இதனால் விலையானது சரிய தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல வெங்காயத்தின் விலையும் சரிந்தது. இதனால் இல்லத்தரசிகள் தக்காளி மற்றும் வெங்காயத்தை அள்ளி சென்றனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக தக்காளி விலையானது உயர்ந்தது. தற்போது மீண்டும் குறைந்துள்ளது. ஆந்திராவில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
School College Holiday: அடிதூள்! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 23ம் தேதி விடுமுறை! சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Related image2
நடுவழியில் நின்ற மின்சார ரயில்! சென்னையில் முடங்கிய ரயில் சேவை! பயணிகள் பரிதவிப்பு!
34
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
Image Credit : Asianet News

பச்சை காய்கறிகளின் விலை என்ன.?

இதனிடையே பச்சை காய்கறிகளின் விலையை தற்போது பார்க்கலாம். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், 

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

44
இன்றைய காய்கறி விலை என்ன.?
Image Credit : Asianet News

இன்றைய காய்கறி விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் கிலோ 30 ரூபாய்க்கு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
காய்கறி விலை
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
வெங்காயம்
தக்காளி விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
School College Holiday: அடிதூள்! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 23ம் தேதி விடுமுறை! சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image2
நடுவழியில் நின்ற மின்சார ரயில்! சென்னையில் முடங்கிய ரயில் சேவை! பயணிகள் பரிதவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved