- Home
- Tamil Nadu News
- ஒரு கிலோ இவ்வளவு கம்மியா.? போட்டி போடும் வெங்காயம், தக்காளி விலை.! அள்ளிச்செல்லும் மக்கள்
ஒரு கிலோ இவ்வளவு கம்மியா.? போட்டி போடும் வெங்காயம், தக்காளி விலை.! அள்ளிச்செல்லும் மக்கள்
சில மாதங்களுக்கு முன்பு உச்சத்தை தொட்ட தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி வெங்காயம் குறைவான விலையில் விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

சமையலில் முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள், அதிலும் தக்காளி, வெங்காயம் இல்லையென்றால் சமையல் ருசியை கொடுக்காது. எனவே காய்கறி சந்தையில் எந்த காய்களை வாங்குகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு வாங்கி செல்வார்கள்.
அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்தால் இல்லத்தரசிகளின் நிலைமை கவலையானது தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தக்காளி மற்றும் வெங்காயம் விலையானது போட்டி போட்டு உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை சென்றது. இதே போல வெங்காயத்தின் விலையும் உச்சத்தை தொட்டது.
இதனால் வீட்டில் தக்காளி மற்றும் வெங்காயம் அதிகளவில் தேவையில்லாத சமையல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனையடுத்து தான் தக்காளி விலையானது சரிய தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல வெங்காயத்தின் வரத்தும் அதிகரித்ததால் விலை வீழ்ந்தது. ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தக்காளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 100 ரூபாய்க்கு 4 கிலோ தக்காளி விற்பனையாகி வருகிறது. இதனை பொதுமக்கள் பை நிறைய அள்ளி செல்கிறார்கள்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய் முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,
பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும்,
கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கோல 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது