50 ரூபாய்க்கு இத்தனை கிலோ தக்காளியா.? கூடை கூடையாக போட்டி போட்டு அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்
சமீபத்திய மாதங்களில் உயர்ந்திருந்த தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தற்போது சரிந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கூடை கூடையாக இல்லத்தரசிகள் வாங்கி செல்கிறார்கள்.

100 ரூபாய்க்கு இத்தனை கிலோ தக்காளியா.? கூடை கூடையாக போட்டி போட்டு அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்
ருசியான உணவுக்காகத்தான் மனிதன் ஓடி. ஓடி உழைக்கிறான். அந்த வகையில் என்ன தான் சம்பாதித்தாலும் உணவு பொருட்கள் வாங்குவதற்கே பற்றாக்குறை ஏற்படுகிறது. அந்த வகையில் ஒரு நேரத்தில் உச்சத்தில் இருக்கும் காய்கறிகளின் விலை, மற்றொரு நேரத்தில் அதள பாதாளத்திற்கு சென்று விடுகிறது. இந்த சூழ்நிலையில் தான் சமையலுக்கு முக்கிய தேவையானது காய்கறிகள், அதிலும் தக்காளி வெங்காயம் தான் ரசம் முதல் பிரியாணி சமைப்பதற்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது.

தக்காளி, வெங்காயம் விலை
மற்ற காய்கறிகளை விட இந்த இரண்டு காய்கறிகளை மட்டுமே அதிகளவு மக்கள் வாங்கி செல்வார்கள். எனவே தக்காளி, வெங்காயத்தின் விலை மட்டும் உயர்ந்தால் இல்லத்தரசிகளின் நிலைமை கவலைதான். மாதம், மாதம் ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக உயர்ந்திருந்த தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையும் அதிகரித்தது. ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தாண்டியது என்றால் வெங்காயம் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையானது.
சரிந்தது தக்காளி விலை
இதனையடுத்து விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும், உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரித்தது. இந்த நிலையில் காரிப் பருவ காய்கறிகளின் வரத்தின் காரணமாக தக்காளி, வெங்காயத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் படி 100 ரூபாய்க்கு 6 முதல் 7 கிலோ தக்காளியை இல்லத்தரசிகள் கூடை நிறைய வாங்கி செல்கிறார்கள். இதேபோல வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 25 முதல் 45 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்தது காய்கறி விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்,
பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கேரட், இஞ்சி விலை என்ன.?
கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும்,
கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை ஆகிறது