பெட்டி பெட்டியாக தக்காளி, மூட்டை மூட்டையாக வெங்காயம்.! அள்ளிச்செல்லும் பொதுமக்கள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி, வெங்காயத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி,வெங்காயம் விலை குறைந்ததால் கிலோ கணக்கில் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். அதே நேரத்தில் மற்ற காய்கறிகளின் விலையில் சற்று ஏற்றம் காணப்படுகிறது.
tomato onion
ஷாக் கொடுத்த தக்காளி, வெங்காயம் விலை
சமையலில் முக்கிய தேவையாக இருப்பது தக்காளி மற்றும் வெங்காயமாகும், அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது உச்சத்தை தொட்டது. ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு விலையானது உயர்ந்தது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டால் வெங்காயத்தின் விலையானது இதை விட அதிகரித்து ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையானது.
இதனால் பரிதவித்த இல்லத்தரசிகள் தக்காளி மற்றும் வெங்காயத்தை குறைவான அளவே வாங்கி சென்றனர். பல இடங்களில் தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமைக்கவும் செய்தனர்.
Onion Price Today
உச்சத்தை தொட்ட வெங்காயம் விலை
மேலும் வெங்காயம், தக்காளி விலையை குறைக்க மத்திய, மாநில அரசிடம் கோரிக்கையும் வைத்தனர். பல இடங்களில் வெங்காயம் விலை உயர்விற்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டது. இதனையடுத்து வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் இருப்பில் உள்ள வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் படி தமிழ்நாடு, ஆந்திரா, மஹாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நாசிக்கில் இருந்து டன் கணிக்கில் வெங்காயம் ரயில்களில் அனுப்பப்பட்டது. அதன் படி மக்கள் கூடும் பகுதிகளில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
onion rate today
விலையை குறைக்க நடவடிக்கை
இதே போல தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு பன்னை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி மற்றும் வெங்காயத்தை விற்பனை செய்தது. இருந்த போதும் இந்த விற்பனையானது அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேராத நிலை தான் நீடித்தது. எனவே தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும் என கூறப்பட்டது. எனவே ஜனவரி மாதம் காரிப் பருவ வெங்காய வரத்து வரும் என கூறப்பட்டது.
TOMATO PRICE
இறங்கிய தக்காளி, வெங்காயம் விலை
இதற்கு ஏற்றார் போல் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை குறைய தொடங்கியது. அந்த வகையில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயில் இருந்து 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெங்காயத்தின் விலையானது ஒரு கிலோ 120 ரூபாயில் இருந்து 25 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அரை கிலோ ஓரு கிலோ என வாங்கி சென்ற மக்கள் கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர்.
Vegetables Price Today
காய்கறி விலை என்ன.?
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையானது சற்று அதிகரித்துள்ளது. இதன் படி வெண்டைக்காய் ஒரு கிலோ 30 முதல் 60 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 22 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 முதல் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
VEGETABLE
இஞ்சி விலை என்ன.?
முருங்கைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது