மாமல்லபுரத்தில் நுழைவு கட்டணம் இல்லை.! இலவசமாகவே சுற்றிப்பார்க்கலாம்.! சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்
மாமல்லபுரத்தில் அனைத்து புராதன சின்னங்களையும் இலவசமாக பார்க்கலாம். நவம்பர் 19 முதல் 25 வரை பாரம்பரிய வாரமாக கொண்டாடப்படுவதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
mahabalipuram
மாமல்லபுரம் சுற்றுலா
சென்னையிலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள மாமல்லபுரத்தில் 8ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பக் கலையை உலகுக்கு பறைசாற்றும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை என பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. இதனை பார்ப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாள் தோறும் மாமல்லபுரத்தில் குவிந்து வருகிறார்கள்.
உலக புகழ் பெற்ற சுற்றுலா தளம்
அந்த வகையில் கடந்த ஆண்டு தாஜ்மஹாலை பார்த்த சுற்றுலா பயணிகளை விட மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளனர். மேலும் சீனா அதிபரும் இந்திய பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சுற்றிப்பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர். அந்த அளவிற்கு உலக புகழ் பெற்ற மாமல்லபுரத்தில் இன்று அனைத்து புராதான சின்னங்களையும் இலவசமாகவே பார்க்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. .
பாரம்பரிய வாரம் கொண்டாட்டம்
அந்த வகையில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் பாரம்பரிய வாரமாக கொண்டாடப்படுகிறது. நவம்பர் 19ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று (19ஆம் தேதி) மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை சுற்றுலா பயணிகள் இலவசமாகவே பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
mamallapuram
சுற்றுலா பயணிகளுக்கு இலவசம்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், தொல்லியல் துறையின் பராமரிப்பில்உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய பகுதிகளை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெண்ணெய் உருண்டை பாறை பகுதியையும் சுற்றிப்பார்க்க 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது