MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TASMAC Shop: இன்று பள்ளிகளுக்கு மட்டுமல்ல டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை! அதிர்ச்சியில் குடிமகன்கள்!

TASMAC Shop: இன்று பள்ளிகளுக்கு மட்டுமல்ல டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை! அதிர்ச்சியில் குடிமகன்கள்!

TASMAC Holiday: இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று பரமக்குடியில் அனுசரிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Sep 11 2024, 07:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
immanuel sekaran memorial

immanuel sekaran memorial

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆண்டு தோறும் செப்டம்பர் 11ம் தேதியன்று சுதந்திரப்போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் தினம் குருபூஜையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று 67வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த குருபூஜையில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திமுக, அதிமுக, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வருகை தருவார்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ramanathapuram

ramanathapuram

இதற்கான பாதுகாப்பிற்காக ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த  6000க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 150 கண்காணிப்பு கேமராக்கள், 5 ட்ரோன் கேமராக்கள் மூலமும் காவல் துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை - ராமநாதபுரம் நான்கு வழி சாலை உட்பட மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாவட்டத்தினர் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற வாகனங்கள் மூலம் மட்டுமே பரமக்குடி வந்து செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது.

35
school holiday

school holiday

இந்நிலையில், சுதந்திரப்போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரின் நினைவு தினத்தை முன்னிட்டு  சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் மாதம் 21ம் தேதி 4 தாலுகாவில்  உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாகும். 

இதையும் படிங்க: Schools Holiday: மாணவர்களுக்கு 10 நாட்கள் கூடுதல் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

45
TASMAC Shop Holiday

TASMAC Shop Holiday

அதேபோல் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்குப் பிரச்னையை பாதுகாக்கவும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டும் தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை மூடப்படும்.

இதையும் படிங்க:  School Holiday: பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

55
Keeladi Museum

Keeladi Museum

மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சிவகங்கை மாவட்டம் கீழடி  அருங்காட்சியகத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved