MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 4 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா? 1500+ சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம்!

4 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா? 1500+ சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம்!

தமிழகத்தில் மே தினம் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 1500+ சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்த முழு பட்டியலை பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 28 2026, 07:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மே தினம் தொடர் விடுமுறை
Image Credit : Asianet News

மே தினம் தொடர் விடுமுறை

தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 30/04/2026 (வியாழக்கிழமை) 01/05/2026 (மே தினம் - வெள்ளிகிழமை) 02/05/2026 (சனிக்கிழமை), மற்றும் 03/05/2026 (ஞாயிற்றுக் கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு 30/04/2026, 01/05/2026 மற்றும் 02/05/2026 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Image Credit : Asianet News

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30/04/2026 வியாழக்கிழமை அன்று 475 பேருந்துகளும், 01/05/2026 வெள்ளிக் கிழமை மற்றும் 02/05/2026 சனிக் கிழமை 315 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 30/04/2026 அன்று 85 பேருந்துகளும், 01/05/2026 மற்றும் 02/05/2026 தலா 75 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
இந்த வாரம் இத்தனை நாட்கள் லீவா.? விடுமுறை லிஸ்ட் உள்ளே - செக் பண்ணுங்க
Related image2
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள்!
34
பெங்களூரு, கோவை
Image Credit : Asianet News

பெங்களூரு, கோவை

மேலும் மாதாவரத்திலிருந்து 30/04/2026 முதல் 02/05/2026 வரை தலா 14 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 03/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 615 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

44
எப்படி முன்பதிவு செய்வது?
Image Credit : google

எப்படி முன்பதிவு செய்வது?

இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 13,103 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 3,950 பயணிகளும் சனிக்கிழமை அன்று 3,134 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 7,232 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விடுமுறைக்கால சிறப்பு பேருந்து
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மூன்று நாட்களை தொடர்ந்து.. அடுத்து இரண்டு நாட்கள் இழுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகள்.. அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்
Recommended image2
Now Playing
TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
Recommended image3
அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
Related Stories
Recommended image1
இந்த வாரம் இத்தனை நாட்கள் லீவா.? விடுமுறை லிஸ்ட் உள்ளே - செக் பண்ணுங்க
Recommended image2
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved