- Home
- Tamil Nadu News
- பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் ரெடி.. முழு விவரம்!
பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் ரெடி.. முழு விவரம்!
சென்னை மட்டுமின்றி பெங்களூரு திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை சிறப்பு பேருந்துகள்
நமது நாட்டின் குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக 24ம் தேதி (சனிக்கிழமை), 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) என 3 நாட்கள் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை டூ நெல்லை, கோவை, கும்பகோணம்
அதாவது சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 550 பேருந்துகளும், 24ம் தேதி (சனிக்கிழமை) 405 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை டூ பெங்களூரு, வேளாங்கண்ணி
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 100 பேருந்துகளும் 24ம் தேதி (சனிக்கிழமை) அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து சென்னை திரும்பவும் பேருந்துகள்
இதேபோல் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 23 மற்றும் 24ம் தேதிகளில் 24 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 26ம் தேதி அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு 800 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. அதே 26ம் தேதி பல்வேறு இடங்களிலிருந்து திருப்பூர், பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
டிக்கெட் எப்படி முன்பதிவு செய்வது?
இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 20,254 பயணிகளும் சனிக்கிழமை 12,811 பயணிகளும் ஞாயிறு அன்று 8,566 பயணிகளும் மற்றும் திங்கட்கிழமை 19,353 பயணிகளும் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்கலாம்.

