MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.! புதிய இணையதள முகவரி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.! புதிய இணையதள முகவரி அறிவிப்பு

8,932 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஜூன் 9ம் தேதி நடைபெற்ற தேர்வில் 15.8 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை www.tnpscresults.tn.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம்.

1 Min read
Author : Ajmal Khan
| Updated : Oct 28 2024, 02:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
tnpsc

tnpsc

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்

ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழக அரசு பணிகளில் இணைய வேண்டும் என  இரவு பகல் பாராமல் அரசு பணியாளர் தேர்விற்கு தயாராவார்கள் அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில்   8,932 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியானது. அதன் படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு ஜூன் 9ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
tnpsc exams

tnpsc exams

16 லட்சம் பேர் எழுதிய தேர்வு

தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.  3மாத காலத்திற்குள் குரூப் 4 தேர்வு முடிவுகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து  அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தீபாவளிக்கு முன்னதாக முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு முடிவுகளை எந்த தேதியில் வெளியிடுவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக தேர்வாணையத்தின் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.  இதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
 

33
tnpsc

tnpsc

வெளியானது தேர்வு முடிவுகள்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Tamil Nadu Public Service Commission ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV பணிகள்) அறிவிக்கை எண்: 01/2024 தேர்வு முடிவுகள்  www.tnpscresults.tn.gov.in w www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தேர்வு
தமிழ் செய்திகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Govt Scheme: இந்த ஆவணங்கள் இருந்தா போதும்.! ரூ.1.20 லட்சம் மானியம் கிடைக்கும்.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
Recommended image2
Tamil Nadu Government Jobs: தமிழக அரசு அதிரடி.! 8,000 பேருக்கு அரசு வேலை? எப்போ ஆட்கள் தேர்வு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Recommended image3
Now Playing
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், செயல்பாடுகளைப் பார்த்து விமர்சிப்போம் ! தமிழிசை பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved