- Home
- Tamil Nadu News
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: இன்னும் விண்ணப்பிக்கவில்லையா.? தேர்வர்களுக்கு முக்கிய தகவல்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: இன்னும் விண்ணப்பிக்கவில்லையா.? தேர்வர்களுக்கு முக்கிய தகவல்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும். 3,935 காலிப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 24 ஆம் தேதி கடைசி நாள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
ஆண்டு தோறும் லட்டசக்கணக்கான இளைஞர்கள் படிப்பை முடித்து வேலை தேடி பல நகரங்களுக்கு செல்கிறார்கள். அதிலும் பல ஆயிரம் இளைஞர்கள் அரசு வேலைக்காக இரவும் பகலுமாக படித்து வருகிறார்கள். அந்த வகையில் தேர்வுக்கு எளிமையான முறையில் தயார் செய்திடும் வகையில் தமிழக அரசு சார்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிட்டப்பட்டது. விஏஓ, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர், வனக்காப்பாளர் மற்றும் வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
3935 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு
மொத்தம் 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் குரூப் 4 தேர்வு ஜூலை 12 ஆம் தேதி 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் பல லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 24 ஆம் தேதி கடைசி நாளாகும்.
டிஎன்பிஎஸ்சி விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்களே
இதன் பின்னர் விண்ணப்பிக்க முடியாது. எனவே இன்னும் 5 நாட்கள் மட்டுமே குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது. கடைசி நேரத்தில் விண்ணப்பிக்கலாம் என திட்டமிட்டவர்கள் தற்போது விண்ணபிக்க சரியான நேரம் ஆகும். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அவசியமாகும்.
விண்ணப்பத்தை திருத்தம் செய்ய வாய்ப்பு
www.tnpscexams.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது பதிவேற்றம் செய்துள்ள விண்ணப்பங்கள் சரியான முறையில் உள்ளதா.? அனைத்து தகவல்களும் சரியா என ஒரு முறை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளவும் டிஎன்பிஎஸ்சி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் மே மாதம் 29 ஆம் தேதி முதல் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொள்ளலாம்.