TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்கள்! எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு பதிவேற்றம் நிறைவடைந்துள்ளது. 9,491 காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
TNPSC
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.
TNPSC Group 4 Exam
முதலில் 6,244 காலிப்பணியிடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று 3 முறை அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9,491 காலி பணியிடங்கள் உயர்த்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ம் தேதி வெளியானது.
certificate verification
இதனையடுத்து குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது. அதாவது வகுப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் ( Onscreen Certificate Verification) செய்ய வேண்டியது அவசியம்.
TNPSC News
அதன்படி சான்றிதழ் பதிவேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையம் கடந்த நவம்பர் 7ம் தேதி வெளியிட்டது. அதன்படி சான்றிதழ் பதிவேற்றம் நவம்பர் 9 முதல் தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது சான்றிதழ் பதிவேற்றம் முடிந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு தயாராகி வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
TNPSC Group 4 Counseling
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது எக்ஸ் தளத்தில்: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. முதல் நாளில் 200 பேர், அடுத்தடுத்த நாட்களில் 200 பேர் என கலந்தாய்வுக்கு அழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.