MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு! குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி?

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு! குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி?

ரத்து செய்யப்பட்ட TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு மீண்டும் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து எப்படி?

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 12 2026, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : ANI

தனியார் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் கொட்டி கிடந்தாலும் எப்படியாவது அரசு பணியில் சேர்ந்தவிட வேண்டும் என பல லட்சம் இளைஞர்கள் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படுகிறது.

25
Image Credit : our own

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூர்–II மற்றும் IIA)மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு செப்டம்பர் 28ம் தேதி நடைபெற்ற நிலையில் இந்தத் தேர்வை 4,20,217 பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 22ம் தேதி வெளியானதைத் தொடர்ந்து குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றனர். கடந்த பிப்ரவரி 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்-2ஏ பதவிகளுக்கான தமிழ் தகுதித்தாள் தேர்வு நடைபெறவிருந்தது.

Related Articles

Related image1
மாதம் ரூ.51,000 சம்பளம்.! வெளிநாட்டில் கொட்டிக்கிடக்கும் வேலை! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்!
Related image2
நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்
35
Image Credit : our own

இந்நிலையில் பிப்ரவரி 9ம் தேதி நடைபெற இருந்த குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் பல்வேறு குளறுபடி காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. வரலாற்றில் முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் வரும் 22ம் தேதி குரூப் 2 பதவிகளுக்கான பாடத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று சண்முக சுந்தரம் தெரிவித்திருந்தார்.

45
Image Credit : our own

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்2 பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

55
Image Credit : our own

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

* www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

* உங்களின் ஒருமுறை பதிவுத் தளத்தின் (OTR Dashboard) உள்ளே நுழையவும்.

* அதில் உங்களின் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) உள்ளீடு செய்யவும்.

* பின்னர் உங்கள் திரையில் தோன்றும் 'Download Hall Ticket' என்பதைத் தேர்ந்தெடுத்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி.என்.பி.எஸ்.சி.
தேர்வு
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்
Recommended image2
விஜயை நம்பாதீங்க.. அவர் ஒரு பிராடு.. வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விடுவார்..! முன்னாள் மேனேஜர் பகீர்
Recommended image3
மாதம் ரூ.51,000 சம்பளம்.! வெளிநாட்டில் கொட்டிக்கிடக்கும் வேலை! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்!
Related Stories
Recommended image1
மாதம் ரூ.51,000 சம்பளம்.! வெளிநாட்டில் கொட்டிக்கிடக்கும் வேலை! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்!
Recommended image2
நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved