MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Teachers Promotion counselling: இடைநிலை ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! டிசம்பர் 8-க்குள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - நீதிமன்றம் உத்தரவு!

Teachers Promotion counselling: இடைநிலை ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! டிசம்பர் 8-க்குள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - நீதிமன்றம் உத்தரவு!

Teachers Promotion counselling: இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை டிசம்பர் 8 க்குள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என எச்சரித்துள்ளது.

3 Min read
Author : Vishnupriya
Published : Nov 19 2026, 06:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு
Image Credit : https://hcmadras.tn.gov.in site

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எப்போது பதவி உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தகுதியும் அனுபவமும் இருந்தும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறாமல் காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தற்போது ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது.

நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை பள்ளிக்கல்வித்துறை முறையாகச் செயல்படுத்தவில்லை எனக் கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை வரும் டிசம்பர் 8, 2026-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கலந்தாய்வை நடத்தி முடித்ததற்கான அறிக்கையையும் குறிப்பிட்ட தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கெடுவுக்குள் உத்தரவைச் செயல்படுத்தத் தவறினால் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த உத்தரவு பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
உத்தரவு என்ன?
Image Credit : Pinterest

உத்தரவு என்ன?

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வுகளை ஆண்டுவாரியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இடைநிலை ஆசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதியான ஆசிரியர்களின் பட்டியலைத் தயாரித்து, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பதே இந்த வழக்கின் முக்கியக் கோரிக்கையாகும்.

இந்த நிலையில், ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் கூறி ஆசிரியர்கள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

36
அவமதிப்பு வழக்கு
Image Credit : Pinterest

அவமதிப்பு வழக்கு

ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது?

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.

குறிப்பாக, 2026 ஜூன் 9 ஆம் தேதி நீதிபதி பி.டி. ஆஷா பிறப்பித்த உத்தரவில், ஆண்டுவாரியான பதவி உயர்வுப் பட்டியல்களைத் தயாரித்து, தகுதியான ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் உத்தரவுகள் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என ஆசிரியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே தற்போது டிசம்பர் 8-ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

46
கலந்தாய்வு நடத்த உத்தரவு
Image Credit : Pinterest

கலந்தாய்வு நடத்த உத்தரவு

எந்தெந்த பதவி உயர்வுகளுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு?

தற்போதைய பணி - பதவி உயர்வு பெறும் பணி

இடைநிலை ஆசிரியர் - பட்டதாரி ஆசிரியர்

பட்டதாரி ஆசிரியர் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்

பட்டதாரி ஆசிரியர் - உயர்நிலைப்பள்ளித் தலைமை

இதில் இடைநிலை ஆசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்காக 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான பதவி உயர்வுப் பட்டியல்களைத் தயாரித்து, ஆண்டுவாரியாகக் காலிப்பணியிடங்களைக் கணக்கிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது முக்கியமான அம்சமாகும்.

56
டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் என்ன செய்ய வேண்டும்?
Image Credit : Pinterest

டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் என்ன செய்ய வேண்டும்?

  • தகுதியான ஆசிரியர்களைக் கண்டறிந்து ஆண்டுவாரியான பதவி உயர்வுப் பட்டியல்களைத் தயாரிக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களைக் கணக்கிட வேண்டும்.
  • இடைநிலை ஆசிரியர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்.
  • பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
  • தவறினால் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும்.


இந்த வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ள மிக முக்கியமான எச்சரிக்கை இதுதான். டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தி முடித்து, அதுகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யத் தவறினால் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கலந்தாய்வு நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

66
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
Image Credit : Pinterest

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தற்போது பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் நீதிமன்றம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் பதவி உயர்வு கலந்தாய்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

எனவே, அடுத்த சில நாட்களில் பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால பதவி உயர்வு எதிர்பார்ப்புக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
ஆசிரியர்
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஊட்டியில் உறைய வைக்கும் குளிர்: தொடர் உறைபனியால் தேயிலைத் தோட்டங்கள் பாதிப்பு !
Recommended image2
Now Playing
ஆறு மாத ஆட்சியில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !
Recommended image3
Now Playing
காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் ஒழிக்க முடியாது: சென்னை செய்தியாளர் சந்திப்பில் மாணிக்கம் தாகூர் பேச்சு
Related Stories
Recommended image1
VS Babu : யார் இந்த வி.எஸ்.பாபு? திமுக, அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டவர்... தவெகவில் MLA ஆனது எப்படி? வியக்க வைக்கும் அரசியல் பயணம்
Recommended image2
VS Babu Passes Away : ஸ்டாலினையே தோற்கடித்தவர்... கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved