பொங்கல் பரிசுக்கான டோக்கன் எங்கே கிடைக்கும்? மக்களே நோட் பண்ணுங்க
தமிழ்நாடு அரசு 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்
கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் தலா ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்பட்டது. சில ஆண்டுகளில் மாநிலத்தின் நிதி நிலை காரணமாக ரொக்கப் பணம் வழங்கப்படாத சூழலும் இருந்தது. இந்த நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது.
பொங்கல் ரொக்கப் பரிசு ரூ.3000
அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.3,000 ரொக்கத் தொகையும் சேர்க்கப்பட்டுள்ளது. அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட உள்ளது. இந்த பரிசுத் தொகுப்புகள் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு
பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவது குறித்து மக்களிடையே பல கேள்விகள் எழுவது இயல்பானதே. இதற்காக தமிழக அரசு மிகவும் எளிமையான மற்றும் ஒழுங்கான நடைமுறையை பின்பற்றுகிறது. குடும்ப அட்டை அடிப்படையில் ஒவ்வொரு பயனாளிக்கும் தனித்தனி டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன்கள் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் பயனாளர்கள் தங்களது உரிய ரேஷன் கடைக்கு சென்று பரிசுத் தொகுப்பையும் ரொக்கத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்
டோக்கன் அச்சிடும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு டோக்கனிலும் ரேஷன் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரரின் பெயர், குடும்ப அட்டை எண், வசிக்கும் பகுதி மற்றும் டோக்கன் எண் போன்ற முக்கிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் கூட்ட நெரிசலை தவிர்த்து, அனைவருக்கும் சீரான முறையில் பரிசு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக அரசு பொங்கல் திட்டம்
இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 22 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பால் பயனடைய உள்ளனர். கரும்பு கொள்முதல் பணிகள் அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 14, 2026 அன்று தைப்பொங்கல் கொண்டாடப்படுவதற்குள் பரிசுத் தொகுப்பு விநியோகம் முழுமையாக நிறைவடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு ரூ.3,000 வழங்கப்பட்டாலும், மக்களின் பண்டிகை மகிழ்ச்சிக்கு இந்த திட்டம் பெரும் ஆதரவாக அமையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

