- Home
- Tamil Nadu News
- CM Vijay: பிரதமர் மோடியை, சந்தித்த முதல்வர் விஜய்..! மேகதாது, தமிழ்தாய் வாழ்த்து குறித்து விவாதிப்பு
CM Vijay: பிரதமர் மோடியை, சந்தித்த முதல்வர் விஜய்..! மேகதாது, தமிழ்தாய் வாழ்த்து குறித்து விவாதிப்பு
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜோசப் விஜய் இன்று முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம்
பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி தனது ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி தெரவித்தார்.
மேலும் மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடுபட்டு வருகிறது என்றும், இந்நிலையல் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெரிவுரையினை வழங்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் வான்வழி அமைப்பு
மேம்பட்ட நடுத்தர போர் விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி ம்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை தமிழ்நாட்டில் அமைக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.
Chief Minister of Tamil Nadu, Thiru @actorvijay met Prime Minister @narendramodi today.@CMOTamilnadupic.twitter.com/xwE8THhDEV
— PMO India (@PMOIndia) May 27, 2026
காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்கக் கூடாது
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடகா மாநில துணை முதல்வர் அறவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கும் மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முற்றிலும் முரணானது என்றும், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை உருவாக்கி உள்ளது என்றும், இந்தியப் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்துமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும், 2026ம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும் தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர் என்றும், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரவித்து மீனவர்களையும் அவர்களது படகுகுளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் முதல்வர், பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

