MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருவண்ணாமலைக்கு பெளர்ணமி கிரிவலம் போறீங்களா.! பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சொன்ன முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலைக்கு பெளர்ணமி கிரிவலம் போறீங்களா.! பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சொன்ன முக்கிய அறிவிப்பு

ஜூன் 10ஆம் தேதி திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும். காலை 9.25 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு 11.10 மணிக்கு திருவண்ணாமலையை அடையும்.

1 Min read
Author : Ajmal Khan
Published : Jun 06 2025, 08:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருவண்ணாமலை கிரிவலம்
Image Credit : Google

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அதுவே பௌர்ணமி தினத்தில் நடைபெறும் கிரிவலத்திற்கு பல ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்ல விருப்பப்படுவார்கள். 

அந்த வகையில் ஜூன் 10ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜூன் 10ம் தேதி செவ்வாய் கிழமை பெளர்ணமி தினம் அமைந்துள்ளது. அன்றைய தினம் பகல் 12.27 மணிக்கு துவங்கி, ஜூன் 11ம் தேதி பகல் 01.53 வரை பெளர்ணமி திதி உள்ளது.

24
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்
Image Credit : our own

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்

கிரிவலம் செல்ல ஏற்ற நேரமாக ஜூன் 10ம் தேதி காலை 11.35 மணி முதல் ஜூலை 11ம் தேதி பகல் 01.30 மணி வரையிலான நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரவுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இதே போல திருவண்ணாமலைக்கு செல்வதற்காக சிறப்பு ரயில் தொடர்பான அறிவிப்பையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

34
பௌர்ணமி கிரிவலம் சிறப்பு ரயில்
Image Credit : Google

பௌர்ணமி கிரிவலம் சிறப்பு ரயில்

அந்த வகையில் வருகிற 10-ஆம் தேதி திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்வதையொட்டி தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரத்திற்கும் முன்பதிவு செய்யப்படாத சிறப்புரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.25 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது அன்றைய தினம் காலை 11.10 மணியளவில் திருவண்ணாமலையை சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
Image Credit : Facebook

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

அதே நாளில் மறு மார்க்கத்தில் மதியம்12:40 மணிக்கு புறப்படும் ரயிலானது மதியம் 2:15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் வெங்கடேசபுரம், அயந்தூர், அடிச்சனூர், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
திருவண்ணாமலை
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved