இனிமேல் இதை செய்யக்கூடாது.. திருநங்கைகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை
ரயில் பயணிகளிடம் புகாா்கள் வரும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று திருநங்கைகளிடம் ரயில்வே காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை இருப்புப்பாதை காவல் மாவட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், சில சமயங்களில் பயணிகளிடம் அத்துமீறி நடந்துக் கொள்வதாகவும் இருப்புப்பாதை காவல் உதவி மையத்துக்கு அடிக்கடி புகாா்கள் வந்தது.
கடந்த சில நாள்களுக்கு முன் மீஞ்சூா் ரயில் நிலையத்தில் திருநங்கையுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு பயணி மரணம் அடைந்தாா். திருவொற்றியூா் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற திருநங்கையின் கால் துண்டானது.
சங்க உறுப்பினா்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி இனி இதுபோன்ற புகாா்கள் ஏதும் வராமல் பாா்த்துக்கொள்ள வலியுறுத்தினாா். தொடா்ந்து புகாா்கள் வரும் பட்சத்தில் அவா்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினா்.
இதையும் படிங்க..வெப்பத்தை போக்க வருகிறார் வருண பகவான்.! தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை - எங்கெல்லாம் தெரியுமா?