MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பிரதமர் மோடியை போல் வாயால் வடை சுடுபவர் அல்ல ஸ்டாலின்..! முதல்வருக்காக வாய்ஸ் கொடுக்கும் திருமா..

பிரதமர் மோடியை போல் வாயால் வடை சுடுபவர் அல்ல ஸ்டாலின்..! முதல்வருக்காக வாய்ஸ் கொடுக்கும் திருமா..

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன் இந்தியர்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்று உறுதி அளித்த மோடி ரூ.15 கூட கொடுக்கவில்லை ஆனால் முதல்வர் மிக சிறப்பாக மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்தி காட்டியுள்ளதாக திருமா தெரிவித்துள்ளார்.

3 Min read
Author : Velmurugan s
Published : Feb 13 2026, 02:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மகளிரை மனம் குளிரச்செய்யும் மகளிர் உரிமைத்தொகை
Image Credit : Asianet News

மகளிரை மனம் குளிரச்செய்யும் மகளிர் உரிமைத்தொகை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று அவர்களது வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான தொகை 3000, கோடைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு உதவித்தொகை 2000 என ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இது மகளிரை மனம் குளிரச் செய்யும் மகத்தான அறிவிப்பாகும். இதைச் செயல்படுத்திய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு ஏறத்தாழ ஒன்றரை கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தைத் திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்தபோது இது சாத்தியமே இல்லை என்று அதிமுக விமர்சித்தது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளால் வழிமொழியப்பட்டது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியாவின் பிற மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தபோது அதேபோல் மகளிருக்கு உதவித்தொகை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தன. தமிழ்நாட்டில் திமுக அரசு நடைமுறைப்படுத்தும் இந்தத் திட்டத்தைப் பார்த்து இப்போது அசாம், டெல்லி, ஒடிசா, கர்னாடகா, மகராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் முதலான மாநிலங்களில் மாதம் தோறும் மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இப்படி இந்தியாவுக்கே முன்மாதிரியாக இந்தத் திட்டம் அமைந்துவிட்டது.

உரிமைத் தொகையைப் பெறும் பெண்கள் அந்தத் தொகையை சிறு சிறு கடன்களை அடைப்பதற்கும், தமது குழந்தைகளின் கல்வி , முதியோரின் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றை ஈடு கட்டுவதற்கும் பயன்படுத்துகின்றனர். சிறிய அளவில் அவர்கள் சேமிக்கவும் செய்கின்றனர். இந்த உரிமைத் தொகை பெண்களுக்கு, குறிப்பாகக் கிராமப்புறப் பெண்களுக்குப் பொருளாதாரத் தற்சார்பை அளித்திருக்கிறது.

24
உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்த அதிமுக கூட்டணி சதி..
Image Credit : Asianet News

உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்த அதிமுக கூட்டணி சதி..

தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக அதிமுக கூட்டணியினர் சதி செய்துள்ளனர். நீதிமன்றத்தின் மூலமாகத் தடை ஆணை பெறுவதற்கும் முயற்சி செய்து இருக்கிறார்கள். இதை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிப்ரவரி மார்ச் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கும் முன்பணமாக 3000 ரூபாயும்; கோடை காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக 2000 ரூபாய் உதவித்தொகையும் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளார். ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் மகளிருக்கு இன்று கிடைத்திருக்கிறது. இது அவர்களுடைய மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பும் ஆகும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது இந்திய ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து கிராமப்புற மகளிருக்கு அந்தத் தொகை கூலியாகக் கிடைப்பதற்கு வழி செய்தது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் சற்றே பாதுகாக்கப்பட்டது. ‘கொரோனா காலத்தில் இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி அடையாமல் தடுத்ததில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முக்கிய பங்கு வகித்தது’ என்று பொருளாதார நிபுணர்கள் கூறினர். அதைப் போலத்தான் மகளிர் உரிமைத் திட்டமும் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 74% பேர் கிராமப்புறப் பெண்களாவர்.

பெண்களிடம் பணத்தைக் கொடுத்தால் அதை அவர்கள் ஆக்கபூர்வமான வழிகளில் தான் செலவு செய்வார்கள். அது பண சுழற்சியை ஏற்படுத்தி பொருளாதார மேம்பாட்டுக்கு வழி வகுக்கும். மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழ்நாட்டில் அதைத்தான் செய்திருக்கிறது.

Related Articles

Related image1
இந்த விஜய் வேண்டுமா..? ஸ்டாலின் வேண்டுமா? திமுக இனி ஒரு நொடிகூட தூங்க முடியாது.. பாம் போட்ட விஜய்
Related image2
"500-ம் அல்ல... 1000-ம் அல்ல... நேரடியாக ரூ.5000! மகளிர் உரிமைத் தொகையில் நடந்த அதிரடி மாற்றம்!"
34
உயரப்போகும் மகளிர் உரிமைத் தொகை
Image Credit : Asianet News

உயரப்போகும் மகளிர் உரிமைத் தொகை

‘அடுத்து அமையப் போகிற திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதம் 2000 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும்’ என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார். இது யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பாகும். திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெற்று வரும் பெண்கள் ‘மீண்டும் திமுகவைத்தான் ஆட்சியில் அமத்துவோம்!’ என்று உறுதி எடுத்து இருக்கிறார்கள். இந்த அறிவிப்பு அவர்களுக்கெல்லாம் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

44
ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம்..?
Image Credit : Google

ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம்..?

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று திரு நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அது பொய்யான வாக்குறுதி என்பது அம்பலமானது. 15 லட்சம் அல்ல 15 ரூபாயைக் கூட அவர்கள் கொடுக்கவில்லை. திரு மோடியைப் போல வாயால் வடை சுடுபவரல்ல நமது முதலமைச்சர். மிகச் சிறப்பாக மகளிர் உரிமைத் திட்டத்தை அவர் செயல்படுத்திக் காட்டியுள்ளார். எனவே, அடுத்துவரும் திமுக ஆட்சியில் 2000 ரூபாயும் உறுதியாக வழங்கப்படும் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொல். திருமாவளவன்
மு. க. ஸ்டாலின்
மகளிர் உரிமைத் தொகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே.. ஸ்டாலினை வறுத்தெடுத்த விஜய்
Recommended image2
அரசியல் கட்சிகளுக்கு சவால்.. SOP என்றால் என்ன தெரியுமா? இபிஎஸ் கோட்டையில் பிளாஸ்ட் செய்த விஜய்
Recommended image3
இந்த விஜய் வேண்டுமா..? ஸ்டாலின் வேண்டுமா? திமுக இனி ஒரு நொடிகூட தூங்க முடியாது.. பாம் போட்ட விஜய்
Related Stories
Recommended image1
இந்த விஜய் வேண்டுமா..? ஸ்டாலின் வேண்டுமா? திமுக இனி ஒரு நொடிகூட தூங்க முடியாது.. பாம் போட்ட விஜய்
Recommended image2
"500-ம் அல்ல... 1000-ம் அல்ல... நேரடியாக ரூ.5000! மகளிர் உரிமைத் தொகையில் நடந்த அதிரடி மாற்றம்!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved