MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • "500-ம் அல்ல... 1000-ம் அல்ல... நேரடியாக ரூ.5000! மகளிர் உரிமைத் தொகையில் நடந்த அதிரடி மாற்றம்!"

"500-ம் அல்ல... 1000-ம் அல்ல... நேரடியாக ரூ.5000! மகளிர் உரிமைத் தொகையில் நடந்த அதிரடி மாற்றம்!"

தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை முடக்கி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அடுத்த 3 மாதங்களுக்கும் சேர்த்து இன்றைய தினம் தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
| Updated : Feb 13 2026, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மகளிர் உரிமைத் தொகை
Image Credit : Google

மகளிர் உரிமைத் தொகை

தமிழகம் முழுவதும் 1.31 கோடி மகளிருக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோப் பதிவில், “"தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் மகளிர் உரிமைத் தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும், யார் முட்டுக்கட்டை போட்டாலும், எத்தகைய அவதூறுகளைப் பரப்பினாலும், அதிலிருந்து இந்த ஸ்டாலின் ஒருபோதும் பின்வாங்க மாட்டான்.

24
வரவு வைக்கப்பட்ட ரூ.5000
Image Credit : X/@arivalayam

வரவு வைக்கப்பட்ட ரூ.5000

நிதி நெருக்கடி ஒரு பக்கம் இருந்தாலும், பெண்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. இது வெறும் ஓட்டுக்காகச் சொல்லப்பட்ட திட்டமல்ல; பெண்களின் உழைப்பிற்கு இந்த அரசு தருகிற அங்கீகாரம். 

Related Articles

Related image1
மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்.. ராகுல் அதிருப்தி.. கதர்க்கட்சியை 'கை' விட்ட திமுக!
Related image2
ரூ.1000 வரவில்லையா? மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வந்த குட் நியூஸ்!
34
மகளிர் உரிமைத் தொகையின் முக்கியத்துவம்..
Image Credit : x

மகளிர் உரிமைத் தொகையின் முக்கியத்துவம்..

ஏழை, எளிய நடுத்தரக் குடும்பத்துப் பெண்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் என்பது எவ்வளவு பெரிய நிம்மதி என்பது எனக்குத் தெரியும். அந்தத் தாய்மார்களின் முகத்தில் நான் பார்க்கிற மகிழ்ச்சிதான், இந்த அரசுக்குக் கிடைக்கிற மிகப்பெரிய நற்சான்றிதழ். எத்தனையோ பேர் தடுத்தார்கள், எத்தனையோ பேர் விமர்சித்தார்கள்; அத்தனையையும் மீறித் தகுதியுள்ள அத்தனை மகளிருக்கும் இந்தத் திட்டம் போய்ச் சேரும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.

தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!

பிப்ரவரி, மார்ச்,… pic.twitter.com/n7VrMqcrb7

— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 13, 2026

44
பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5000
Image Credit : tndipr

பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5000

மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாயிலாகவோ, நீதிமன்றம் வாயிலாகவோ மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி வைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தலா ரூ.1000 மற்றும் கோடை காலத்திற்காக சிறப்பு நிதியாக ரூ.2000 சேர்த்து இன்றே மகளிரின் வங்கி கணக்குகளில் ரூ.5000ஆக வரவு வைக்கப்படுகிறது. மேலும் திராவிடமாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகையானது ரூ.1000ல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
திமுக
தமிழ்நாடு அரசு
மகளிர் உரிமைத் தொகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே அறிவிப்பில் இபிஎஸ்-ஐ காலி செய்த முதல்வர் ஸ்டாலின்... இனி மகளிர் உரிமை ரூ.2000! குஷியில் இல்லத்தரசிகள்..
Recommended image2
"ஈபிஎஸ் கோட்டையில் 'தளபதி' என்ட்ரி: சேலத்தில் இன்று விஜய் காட்டப்போகும் அரசியல் அதிரடி!"
Recommended image3
பல பெண்களிடம் தீராத விளையாட்டு பிள்ளையாக இருந்த மருமகன்.! விஷயம் தெரிந்த மாமனார்.. கதறும் மகள்.. நடந்தது என்ன?
Related Stories
Recommended image1
மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்.. ராகுல் அதிருப்தி.. கதர்க்கட்சியை 'கை' விட்ட திமுக!
Recommended image2
ரூ.1000 வரவில்லையா? மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வந்த குட் நியூஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved