லாரி லாரியாக வரும் தக்காளி, வெங்காயம்.! காய்கறி சந்தையில் ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
தக்காளி மற்றும் வெங்காயம் விலை சமீபத்தில் அதிகரித்தது. இதன் காரணமாக இல்லத்தரசிகளின் மாத பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் தற்போது கோயம்பேடு சந்தையில் தக்காளி வெங்காயத்தின் விலை சரிந்துள்ளது.
Tomato price
தக்காளியும் வெங்காயமும்
காய்கறி விலையானது கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி மற்றும் வெங்காயம் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
எனவே சமையலில் தக்காளி வெங்காயம் இல்லாமல் சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கிலோ கணக்கில் வாங்கி சென்ற மக்கள் குறைவான அளவே தக்காளியையும் வெங்காயத்தையும் வாங்கி சென்றனர்.
tomato onion price
விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயம் விலை நாளுக்கு நாள் போட்டி போட்டு உயர்ந்தது. 100 ரூபாயை கடந்தும் விலை உச்சத்தை நோக்கி சென்றது. கன மழை மற்றும் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி போன்ற காரணத்தால் விலை உயர்ந்தது. எனவே விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்தது.
மத்திய அரசை பொறுத்தவரை விலை அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு ரயில்களின் மூலம் வெங்காயம் டன் கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது.
tomato
அதிகரித்த வரத்து- குறைந்தது விலை
தமிழக அரசை பொறுத்தவரை பண்ணை பசுமை கடைகளில் குறைவான விலையில் தக்காளி மற்றும் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக ஓரளவு விலை கட்டுப்படுத்தப்பட்டாலும் அனைத்து மக்களும் சென்று சேர முடியாத நிலை இருந்தது.
இந்த நிலையில் தான் காரிப் பயிர்கள் வரத்து காரணமாக வெங்காயத்தின் விலையானது நாடு முழுவதும் குறைய தொடங்கியது. தமிழகத்தில் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது 35 முதல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
tomato price today
சரிந்தது தக்காளி விலை
இதே போல தக்காளி விலையும் குறைந்து வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு சந்தைக்கு டன் கணக்கில் தக்காளியின் வரத்து தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது. ஒரு கிலோ 18 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது இதனால் 100 ரூபாய்க்கு 5 முதல் 6 கிலோ தக்காளியை வாங்கி செல்லும் நிலை உள்ளது.
vegetable price
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 18 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
today vegetable price
இன்றைய காய்கறி விலை என்ன.?
வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒன்று 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 170 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்ககும், புடலங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது