ஒரே நாளில் கிடு கிடுவென குறைந்த காய்கறிகள் விலை.! ஒரு கிலோ பீன்ஸ்,கேரட், முங்கைக்காய் விலை இவ்வளவு தானா.?
சமீபத்தில் உச்சத்தில் இருந்த தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை, மழை ஓய்ந்ததால் வரத்து அதிகரித்து தற்போது சரிந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனையாகிறது.
காய்கறி விலை என்ன.?
காய்கறிகள் தான் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் சாம்பார் முதல் பிரியாணி வரை வெங்காயம் மற்றும் தக்காளியின் பங்கு இன்றியமையாதது. இந்தநிலையில் தான் கடந்த ஒரு சில வாரங்களாக வெங்காயம் மற்றும் தக்காளியின் விலையானது கடுமையாக உயர்ந்திருந்தது. ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை ணென்னை கோயம்பேட்டில் தொட்டது. இதே போல வெங்காயத்தின் விலையும் அதிகரித்திருந்தது.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது.குறிப்பாக மழையின் காரணமாக காய்கறி செடிகளில் பூக்கள் உதிர்வால் காய்கள் பிடிப்பது பாதிக்கப்பட்டது. மேலும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கத்தின் காரணமாக அதிகளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டதும் முக்கிய காரணியாக உள்ளது.
போட்டி போட்ட தக்காளி, வெங்காயம் விலை
இந்தநிலையில் வெங்காயம் மற்றும் தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டது. அதன் படி சென்னையில் பண்ணை பசுமை மையங்களில் குறைந்த விலையில் தக்காளி மற்றும் வெங்காயம் விற்பனையானது. ஆனால் தமிழகத்தில் மற்ற மாநிலங்களில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்தது. இந்தநிலையில் மழை சற்று ஓய்ந்திருக்கும் காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல மற்ற பச்சை காய்கறிகளின் விலையும் சரசரவென குறைந்துள்ளது.
கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Vegetables Price Koyembedu
கேரட், பீன்ஸ் விலை என்ன.?
குடைமிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒன்று 15 முதல் 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், விற்பனையாகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் 20 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது