கிடு, கிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை.! கோயம்பேட்டில் முருங்கை, அவரை, கேரட் விலை என்ன தெரியுமா.?
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக வெண்டைக்காய், முருங்கைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையானது சற்று அதிகரித்துள்ளது.
vegetables
வெங்காயம் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Vegetables Price Today
அவரைக்காய் விலை என்ன.?
நெல்லிக்காய் ஒரு கிலோ 102 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பாகற்காய் 40 ரூபாய்க்கும், சுரைக்காய் 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் 64 ரூபாய்க்கும், அவரைக்காய் 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 12 ரூபாய்க்கும், கேரட் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முருங்கைக்காய் 120 ரூபாய்க்கு விற்பனை
காலிபிளவர் 25 ரூபாய்க்கும், கொத்தவரை 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 12 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 120 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 25 ரூபாய்க்கும், பீன்ஸ் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இஞ்சி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய்க்கும், மாங்காய் 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், பூசணி 25 ரூபாய்க்கும், முள்ளங்கி 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 50 ரூபாய்க்கும், புடலங்காய் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்