உச்சத்தை தொட்ட இஞ்சி விலை..! சரிவை நோக்கி செல்லும் தக்காளி- கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னையில் மொத்த சந்தையான கோயம்பேட்டில் இருந்து சில்லரை வர்த்தகத்திற்கு வாங்கி செல்லப்படுகிறது. இந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் இஞ்சி, சின்ன வெங்காயம் விலையானது அதிகரித்துள்ளது.
காய்கறி விலை என்ன.?
காய்கறிகளின் வரத்தை பொறுத்து கோயம்பேடு சந்தையில் விலையானது ஏறி, இறங்கி வருகிறது. அந்த வகையில் இன்று காய்கறி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 45 ரூபாய்க்கும், பீட்ரூட் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. குடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Koyambedu
கத்திரிக்காய் விலை என்ன.?
பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், கொத்தவரங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பச்சை கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உச்சத்தில் இஞ்சி விலை
கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது படிப்படியாக குறைந்து ஒரு கிலோ 25 ரூபாய் என்ற கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்ரை வர்த்தகத்தில் 30 ரூபாய் வரை தக்காளியானது விற்பனையாகிறது. சமையலுக்கு முக்கிய தேவையான இஞ்சியின் விலையானது தாறுமாறாக ஏறி உள்ளது . கடந்த சில நாட்களாக ஒரு கிலோ இஞ்சி 180 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது, இன்றைய நிலையில் இஞ்சின் விலை 220 ரூபாயிலிருந்து 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்
காட்டு யானைகளை விரட்ட சென்ற விவசாயிகள்; விவசாயிகளை திருப்பி விரட்டிய காட்டு யானை..!!