Vegetable Price : மீண்டும் குறைந்த தக்காளி விலை.! ஒரு கிலோ வெங்காயம், இஞ்சி, பீன்ஸ் விலை என்ன தெரியுமா.?
Vegetable Price in Koyambedu : காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையானது கோயம்பேடு சந்தையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி விலையானது கடந்த சில நாட்களாக உயர்ந்து இருந்தது. தற்போது சற்று விலையானது குறைந்துள்ளது.இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Vegetable Price in Koyambedu
குறைந்த தக்காளி விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலையானது கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்ப்டு வந்தது. தற்போது தக்காளி வரத்து சற்று அதிகரித்த காரணத்தில் ஒரு கிலோ தக்காளி 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Vegetable Price in chennai
கேரட் விலை என்ன.?
பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பீட்ரூட்டில் இப்படி ஒரு முறை ஊத்தப்பம் செய்ங்க.. டேஸ்ட் வேற லெவல்..!
vegetable price hike
சின்ன வெங்காயம் விலை என்ன.?
பாகற்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று 5 முதல் 7 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சுரைக்காய் விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது